ஆண்டவரே, என் ஏங்கலெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது என் தவிப்பு உமக்கு மறைவாயிருக்கவில்லை(சங். 38:9).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/L-DZqYW_oAs
கர்த்தர் உங்கள் ஏக்கங்களையும், தவிப்புகளையும் அறிந்தவர். அவைகள் அவருக்கு மறைவாயிருக்கவில்லை. ஏக்கங்கள் என்பது நம்முடைய விருப்பங்களையும், வாஞ்சையையும் குறிக்கிறது. அவைகள் நிறைவேறாத போதும், அவைகளில் காலதாமதம் ஏற்படும் போதும் அது தவிப்பாக மாறிவிடுகிறது.
சகோதரரே, இஸ்ரவேலர் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனை நோக்கிச் செய்யும் விண்ணப்பமுமாயிருக்கிறது என்று பவுல் தன்னுடைய ஏக்கத்தை ரோமர் 10:1ல் வெளிப்படுத்தினான். அதற்காக, யூதரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப்போலவுமானேன் என்று கூறினான். ஆகிலும் அவனுடைய நாட்களிலிருந்து இதுவரை அது நிறைவேறாத ஏக்கமாகவே காணப்படுகிறது. யோபு வேதனையின் பாதையில் கடந்து சென்ற போது, ஆ, என் மன்றாட்டு எனக்கு அருளப்பட்டு, நான் வாஞ்சிப்பதைத் தேவன் எனக்குத் தந்து, தேவன் என்னை நொறுக்கச் சித்தமாய், தம்முடைய கையை நீட்டி என்னைத் துண்டித்துப்போட்டால் நலமாயிருக்கும் என்று தன்னுடைய மரணத்தை விரும்பி, அதற்காக வேண்டினான். கர்த்தர் அவனுடைய விருப்பத்தின் படி அவனை அழித்துப்போடாமல், அதற்குப் பதிலாக அவனுடைய தவிப்பை மாற்றி, இரட்டிப்பான நன்மைகளை அவன் வாழ்க்கையில் கட்டளையிட்டு அவனை ஆசீர்வதித்து உயர்த்தினார். தாவீது பெத்லகேமின் ஒலிமுகவாசலிலிருக்கிற கிணற்றின் தண்ணீர்மேல் ஆவல்கொண்டு, என் தாகத்திற்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான். உடனே மூன்று பராக்கிரமசாலிகள் துணிந்து எதிரியின் பாளையத்தின் ஊடாய் போய், பெத்லகேமின் ஒலிமுகவாசலிலிருக்கிற கிணற்றிலே தண்ணீர் மொண்டு, தாவீதினிடத்தில் கொண்டுவந்தார்கள், ஆனாலும் தாவீது அதைக் குடிக்க மனதில்லாமல் அதைக் கர்த்தருக்கென்று ஊற்றிப்போட்டு, இந்த மனுஷரின் ரத்தத்தைக் குடிப்பேனோ என்று சொல்லி அதைக் குடிக்கமாட்டேன் என்றான். அவனுடைய ஏக்கமும் விருப்பமும் தவறுதலானது என்பதை அவன் புரிந்து கொண்டான்.
கர்த்தருடைய பிள்ளைகளே, உங்கள் வாழ்க்கையிலும் பல ஏக்கங்கள் காணப்படக் கூடும். சில வேளைகளில் அவைகள் நன்மைக்கேதுவானவைகளாகவும், சில வேளைகளில் அவைகளின் விளைவை நீங்கள் அறியாமலும் காணப்படக் கூடும். இன்னும் சிலவேளைகளில் அவைகள் தீமைக்கேதுவானவைகளாகவும் கூட காணப்படலாம். உங்கள் விருப்பங்கள் கர்த்தருக்கு உகந்ததாகவும், உங்கள் எதிர்காலத்திற்கு ஆசீர்வாதமாகவும் காணப்படும் போது, கர்த்தர் அதை உங்கள் வாழ்க்கையில் நிச்சயமாய் தந்து உங்களைக் கனப்படுத்துவார். உங்களை எந்நாளும் அதினிமித்தம் தவிக்கும் படிக்குக் கர்த்தர் ஒப்புக்கொடுத்து, அதைத் தாமதப்படுத்துவதில்லை. கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு, அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார் என்று சங். 37:4 கூறுகிறது. நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும் என்பதையும், விரும்பினது வரும்போது அது ஜீவவிருட்சம்போல் இருக்கும் என்பதையும் கர்த்தர் அறிந்திருக்கிறார். ஆகையால் நியாயமான உங்கள் ஏக்கங்களைக் கர்த்தர் துரிதமாய் நிறைவேற்றி, உங்கள் தவிப்புகளுக்கு ஒரு முடிவை உண்டாக்குவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

