கூலியாளும், நல்ல மேய்ப்பனும் (The Hired Man and The Good Shepherd)

யோவா 10:13-15 கூலியாள் கூலிக்காக வேலைசெய்கிறவனாகையால் ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படான். நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/17djoz2clvQ

ஒரு ஊரில் ஒரு தாயின் மகனுக்கு மிகப்பெரிய புற்றுநோய் வியாதி வந்தது. நாளுக்கு நாள் அவனுடைய உடல் நிலை மிகவும் மோசமாகிக்கொண்டே போனது. இந்த மகன் தாய்க்கு ஒரே மகன். தாய் தன்னுடைய கணவனையும் சில வருசத்துக்குமுன் இழந்தாள்; இப்பொழுது மகனுடைய உடல்நிலையும் மிகமோசமாக இருந்தது. மருத்துவமனையில் அவனை கவனித்துக்கொண்டிருந்த செவியிலியருக்கும் அந்த மகனுடைய சூழ்நிலையை பார்த்து பரிதாபங்கொண்டார்கள். அந்த செவியிலியர் தன்னால் முயன்ற அளவு அந்த மகனுக்கு உதவி செய்துகொண்டு வந்தார்கள். செவியிலியர் தன்னுடைய எட்டு பணிநேர பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு கடந்து சென்றார்கள். வீட்டிற்கு கடந்து சென்றவுடன் அந்த செவிலியர் தன்னுடைய வீட்டு வேலையை பார்க்க ஆரம்பித்தார்கள். அவர்களுடைய மகனுக்கு பள்ளி பாடம் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார்கள். கணவனுக்கு வேண்டிய காரியங்களை செய்துகொடுத்தார்கள். வீட்டை சுத்தம் செய்தார்கள். பின்பு, மறுநாள் காலையில் மருத்துவமனைக்கு வரும்வரைக்கும் அந்த செவிலியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகனை மறந்துபோனார்கள். மறுநாள் காலையில் வந்த செவிலியர் அந்த மகனுடைய தாயிடம் நீங்கள் வீட்டிற்கு கடந்து செல்லவில்லையா என்று கேட்டார்கள். அதற்கு அந்த தாய் சொன்னால், என் மகனுடைய நிலைமை இப்படி இருக்கும்போது நான் எப்படி வீட்டிற்கு போய் நிம்மதியாக இருக்க முடியும் என்று சொன்னார்கள். அந்த செவிலியரைப்போல தான் இந்நாட்களில் கூலிக்காக வேலை செய்யும் எஜமான்களினிமித்தம் எந்தவொரு பயனும் இல்லை. தாயை போல நல்ல மேய்ப்பனாக இருக்கும் இயேசு மாத்திரமே தன்னுடைய ஆடுகளுக்காக ஜீவனை கொடுக்கிறார்.

மக்களுக்கு உதவ எதையும் செய்ய ஆயத்தமாயிருப்பவரே நல்ல மேய்ப்பன். உங்களுக்காக தன்னுடைய ஜீவனையே கொடுத்த நல்ல மேய்ப்பன், நீங்கள் கேட்டுக்கொள்வதை நிறைவேற்றாமலிருப்பாரா ? நூறு ஆடுகளில் ஒரு ஆடு தொலைந்துபோனாலும், அதை தேடி செல்பவர் தான் நல்ல மேய்ப்பன். ஆகையால் தான் இயேசு சொன்னார் மந்தையிலில்லாத, தொழுவதிலில்லாத வேறே ஆடுகள் எனக்கு இருக்கிறது என்று இயேசு கூறினார். இயேசுவே நல்ல மேய்ப்பன். தாவீது சொல்லுகிறான், கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன் என்பதாக. ஆடு மேய்கிறவர்களை பார்த்திருக்கிறீர்களா? ஆடுகள் எவ்வளவு தூரம் தள்ளி மேய்ந்துகொண்டிருந்தாலும், தூரத்திலிருக்கும் மேய்ப்பனின் சத்தம் இது தான் என்று சரியாக கண்டுபிடித்துவிடும். அதுபோல தான், இயேசுவின் சத்தம் கேட்கிற ஆடுகளாய், மேய்ப்பனுக்கு பின்பாக செல்லும் ஆடுகளாய் காணப்படுங்கள். அப்பொழுது பிதாவின் கரத்திலிருக்கும் உங்களை ஒருவனாலும் பிரித்துக்கொள்ள முடியாது.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *