தேவனை துக்கப்படுத்தாதிருங்கள் (Do not grieve God).

அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக் கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம். ஏசாயா 53:3. 

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/h2eqGIRRBao

                மோசே சினாய் மலையில் தேவ சமுகத்தில் காத்திருந்த போது, கர்த்தர் இஸ்ரேல் ஜனங்களுக்கு நியாயப்பிரமாணத்தை கொடுத்தார். யாத்திரயாகாமம் 28 ம் அதிகாரம் முழுவதும் ஆசாரிய ஊழியத்திற்கு என்று அழைக்கப்பட்ட ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் மகிமையும் அலங்காரமுமான பரிசுத்த வஸ்திரங்களை உண்டுபண்ணுவதை குறித்து மோசேக்கு தேவன் கற்பித்தார்.

                ஆனால் அதே சமயத்தில் ஆரோனோ கீழே இஸ்ரேல் ஜனங்கள் தங்களுக்கு தெய்வங்களை உண்டுபண்ணவேண்டும் என்று கேட்ட போது ஒரு பொன் கன்று குட்டியை செய்து கொடுத்தான்.( யாத் 32) அதோடு ஜனங்களை நிர்வாணப்படுத்தி இருந்தான்.

                ஒரு புறம் தேவன் அவனுக்காவும் அவன் பிள்ளைகளுக்காகவும் மகிமையான வஸ்திரங்களை செய்வதை குறித்து கற்பிக்கிறார் ஆனால் மறுபுறம் ஜனங்களை ஆரோன் நிர்வாணப்படுத்தி தேவனை துக்கப்படுத்தினான்.

                அநேக வேளைகளில் கர்த்தர் நம்மை எப்படி ஆசிர்வதிக்க வேண்டும் நம்மை எப்படி மகிமை படுத்த வேண்டும் என்று நமக்காக சிறந்த திட்டங்களை செய்து கொண்டிருக்கும் போது  நாமோ தேவனை துக்கப்படுத்துகிற காரியங்களை செய்கிறோம்.

ஆகிலும் வேதம் சொல்கிறது ‘நாம் உண்மையற்றவர்களாய் இருந்தாலும் தேவன் உண்மையுள்ளவர்’ – 2 தீமோ 2:13. அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறார்.

இயேசு கிறிஸ்துவை அதிகம் துக்கப்படுத்தியது போர்சேவகர்களோ பிலாத்துவோ அல்ல ஏரோதும் அல்ல பரிசேயர்களும் அல்ல, அவருடைய சொந்த ஜனங்களாகிய நாம் தான்.

 “என் சிநேகிதர் வீட்டில் காயப்பட்டேன் – சகரிய13:6

நீங்கள் மீட்கப்படும்நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள் – எபேசி 4:30 என்ற வார்த்தை அவருடைய ஜனமாகிய நமக்கு கொடுக்கப்பட்டதே

தேவனுக்கு பிரியமாய் வாழ கர்த்தர் கிருபை அளிப்பாராக!

           Oh whatever grieves the heart of the Lord, let them grieves me.

 B.Thivakar
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *