தேவனை தேடுங்கள் அப்பொழுது பிழைப்பீர்கள் (Seek God and live)

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/zEOal12SEZk

நம்முடைய தேவன் எங்கும் நிறைந்தவர் (Omni present).  நாம் தடிவியாகிலும் அவரை  கண்டடையத்தக்கதாய் அவர் நமக்கு சமீபமாக இருக்கிறார் (Acts 17:27), தேவன் நமக்குள்ளே வசமாயிருக்கிறார் (1 Cor. 3:16).

ஒருபுறம் தேவன் இவ்வளவு அருகில் காணப்பட்டாலும் அவருடைய ஒரு சுபாவம் அவர் தன்னை மறைத்து கொள்கிற தேவன் (Isa. 45:15), எனவே நாம் அவரை தேடவேண்டும்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு மரியாளிடம் ஒரு தோட்டக்காரனை போல தன்னை காண்பித்தார். மரியாளோ தொடர்ந்து அவரை தேடியதால் கண்டுகொண்டாள். எம்மாவூர் சீஷரிடம் தன்னை ஒரு வழிப்போக்கனை போல் காண்பித்தார். சீஷர்கள் அவரை வருந்தி அழைத்த போது அவர்களுக்கு தன்னை வெளிப்படுத்தினார்.

அதிகாலையில் தேவனை தேடுகிறேன் என்று அறிக்கையிட்ட தாவீது, தன்னுடைய கடைசி நாட்களில் சாலமோனை பார்த்து “நீங்கள் உங்கள் இருதயத்தையும், உங்கள் ஆத்துமத்தையும், உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடுகிறதற்கு நேராக்குங்கள்” என்று கட்டளையிட்டார் (1 Chron. 22:19).

உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள் (Jer. 29:13) என்பது தேவனின் வாக்கு.

ஒரு தேசம் ஆசீர்வதிக்கப்பட  என்ன செய்யவேண்டும் என்று கர்த்தர் சாலமோனுக்கு கொடுத்த ஆலோசனை “நம்மை தாழ்த்தி ,ஜெபம் பண்ணி, தேவனின் முகத்தை தேடி, பொல்லாத வழிகளை விட்டு திரும்பவேண்டும்” – 2 Chron. 7:14.

கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாருக்குச் சொல்லுகிறது என்னவென்றால்: என்னைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள் – Amos 5:4, ஆகையால் கர்த்தருடைய பிள்ளைகளாகிய நீங்கள் ஆண்டவரைத் தேடுங்கள், அப்போது நீங்கள் வாழ்ந்து சுகித்திருப்பீர்கள்.

Brethren,the crying sin of the church is her laziness after God  – Samuel Chadwick

கர்த்தர் தாமே உங்களோடு கூட இருப்பராக. ஆமென்.

B.Thivakar
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *