முதலாவது.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மனிதனாக பிறந்தபின்பு, அவரது பன்னிரெண்டாம் வயதில் பேசிய வார்த்தை “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று நீங்கள் அறியீர்களா” (Luke 2:49). இந்த வார்த்தைகள் தான், வேதத்தில் அவர் பேசிய முதல் வார்த்தையாக எழுதப்பட்டது.

தான் ‘முதலாவது’ பிதாவோடு இருக்கவேண்டும் என்ற தீர்மானத்தை சிறுவயதிலே கொண்டிருந்தார். தன்னுடைய 12 சீஷர்களை தெரிந்தெடுத்த போது ‘முதலாவது’ தன்னுடன் இருக்கவேண்டும் அதன் பின்பு தான் அவர்கள் பிரசங்கம் பண்ணவும், வியாதியஸ்தர்களை குணப்படுத்தவும், பிசாசுகளை துரத்தவும் ஏற்படுத்தினார். (Mark 3:14,15).

ஒவ்வொரு நாளும் நாம் முதலாவது பேசும் நபர் தேவனாக இருக்க வேண்டும்! வாசிக்கும் முதலாவது வார்த்தை தேவ வார்த்தையாக இருக்க வேண்டும்! ஒரு காரியத்தை செய்யும் முன்பு முதலாவது தேவனிடம் ஆலோசனை கேட்கவேண்டும்!.

முதலாவது வேலையையோ அல்லது குடும்பத்தையோ அல்லது வேறு எதையோ தேடுங்கள் என்று தேவன் சொல்லவில்லை அவருடைய ராஜ்ஜியத்தையும் நீதியையும் முதலாவது தேடுவோமென்றால்,அப்பொழுது எல்லாவற்றையும் அவர் பொறுப்பெடுத்துக்கொள்வார்.(Mat 6:33).

If God is not first in our thoughts and efforts in the morning, He will be in the last place the remainder of the day – E.M Bounds.

B. Thivakar
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *