வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீஷர்கள் கர்த்தரைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள் (யோவான் 20:19, 20).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/XIW7ckmkJNs
உயிர்த்தெழுதலின் ஞாயிறு அன்று இயேசு உயிரோடு எழுந்த பின்பு, ஐந்து முறை தன்னை பின்பற்றினவர்களுக்கு அன்றைய தினமே தரிசனமானார். குறிப்பாக மேற்குறிப்பிட்ட வசனங்களில், சீஷர்கள் யூதர்களுக்குப் பயந்து கதவுகள் பூட்டப்பட்ட வீட்டில் இருக்கையில் இயேசு அவர்கள் மத்தியில் வந்து நின்று அவர்களைப் பார்த்து உங்களுக்குச் சமாதானம் என்றார். சமாதானம் என்ற வார்த்தையின் மூலபதமாகிய ஷாலோம் என்ற எபிரேய வார்த்தையில் எல்லா ஆசீர்வாதங்களும் அடங்கியிருக்கிறது, நீங்கள் எல்லா நன்மைகளைப் பெற்று நன்றாயிருங்கள் என்பதாய் காணப்படுகிறது. ஆகையால் தான் யூதர்கள் ஒருவரையொருவர் பார்க்கும் போதும் பிரிந்து செல்லும் போதும் ஷாலோம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள்.
கர்த்தருடைய பிள்ளைகளே! உயிர்த்தெழுந்த ஆண்டவர் உங்களைப் பார்த்து உங்களுக்குச் சமாதானம் என்று கூறுகிறார். உங்களுக்காகக் காயப்பட்ட ஆண்டவருடைய காயங்களை நோக்கிப் பாருங்கள். நமக்குச் சமாதானத்தை தரும்படிக்கு, அவர் தன்மேல் ஆக்கினைத்தீர்ப்பை ஏற்றுக்கொண்டார், நமக்கு வரவேண்டிய தண்டனைகளை ஏற்றுக்கொண்டார். உங்கள் வியாதிகளை நீக்கி, உங்களுக்குச் சுகத்தைத் தருவதற்காகக் தழும்புகளை தன்மேல் ஏற்றுக்கொண்டார். அவருடைய காயங்களை நோக்கிப்பார்க்கும் போது ஒரு நோய்களும் உங்களை அணுகுவதில்லை. அவருடைய தரித்திரத்தினால் நீங்கள் ஐசுவரியவான்களாக்கும்படிக்கு சிலுவையில் தரித்திரராய் தொங்கினார். நாம் பயங்களிலும், பாடுகளிலும். கஷ்டங்களின் பாதைகளிலும் கடந்துசெல்லும் போது, அவருடைய காயங்களைக் காண்பிக்கிற தேவன் அவர். உங்களுக்காக அத்தனைப் பாடுகளையும் ஏற்றுக்கொண்டவர், உங்களை ஆசீர்வதிப்பது நிச்சயம்.
சீஷர்கள் இயேசுவைக் கண்டு சந்தோஷப்பட்டார்கள். உலகத்தின் குடிகள் கலக்கத்தில் காணப்படுகிற இந்த வேளையில், ஆண்டவருடைய சீஷர்களாய் காணப்படுகிற நீங்கள் கலங்கவேண்டிய அவசியமில்லை, காரணம் உங்கள் மீட்பர் உயிரோடிருக்கிறார், அவருடைய கல்லறை மாத்திரம் திறந்திருக்கிறது, அவர் சதாகாலமும் உயிரோடிருக்கிற தேவன். ஆகையால் மனம் கலங்காதபடி சந்தோஷமாயிருங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar