ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.

சங்கீதம் 46 : 1. தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர்.

ஆபத்துக்காலம் என்பது மனிதர்கள் யாராலும் உதவி செய்ய முடியாத ஒரு காலம். ஒரு சில ஆபத்துகளில் மனிதர்கள் உதவி செய்யலாம்; ஒரு சிறு விபத்தோ, கஷ்டமோ , நஷ்டமோ காரியங்களில் மனிதர்கள் உதவி செய்யலாம். ஆனால் இந்த உலகத்தில் யாராலும் உதவி செய்ய முடியாத ஆபத்துக்கள் வரலாம். ஒரு சில நாட்களுக்கு முன்பு, கொரோனா வியாதியின் தாக்கம் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில், ஒரு வாலிப ஸ்திரி திடீரென்று மயக்கம் போட்டு சுயநினைவில்லாதவளாக கீழே விழுந்தாள். அதை பார்த்த அனைவரும் அந்த சகோதரிக்கு உதவி செய்ய வரவில்லை. பார்த்தவர்கள் எல்லாரும் ஒருவேளை அந்த பெண்ணிற்கு கொரோனா வியாதி ஏற்பட்டிருக்கும்; அந்த பெண்ணை தொட்டு தூக்கினாலோ, இல்லை தண்ணீர் கொடுத்தாலோ நமக்கும் அந்த வியாதி வந்துவிடுமென்று அந்த பெண்ணிற்கு உதவி செய்ய யாரும் வரவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் கூட நமக்கு உதவி செய்ய அனுகூலமான துணையாக நம்முடைய இயேசு இருக்கிறார் என்பதை தேவ பிள்ளைகள் அறிந்துகொள்ள வேண்டும். ஆகையால் நாம் பயப்பட தேவையில்லை.

இதற்கடுத்த வசனங்கள் (சங் 46 : 2 , 3 )ஐ வாசிக்கும்போது பூமிநிலை மாறினாலும்; அதாவது இப்பொழுது இருக்கிற இந்த பூமி மாறிப்போனாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்து போனாலும் அதாவது இமயமலை போன்ற மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்து போனாலும்; சமுத்திரம் என்று எழுதப்படவில்லை மாறாக நடுச்சமுத்திரம் என்று எழுதப்பட்டிருக்கிறது; அப்படியென்றால் உதாரணத்திற்கு கத்தாரிலிருந்து இந்தியாவுக்கு நடுவில் 3000 கிலோ மீட்டர் கடல் இருக்குமென்றால் , கிட்டதட்ட 1500 கிலோ மீட்டர் உயரமுள்ள மலை சாய்ந்தாள் தான் அது நடுச்சமுத்திரத்தில் விழும்; ஒருவேளை அப்படி மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்தாலும், அதன் மூலமாக ஜலங்கள் கொந்தளித்து பொங்கினாலும் அதாவது சுனாமி போன்ற இயற்கை பேரிடர்கள் வந்தாலும், அதின் பெருகினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும் அதாவது சுனாமி மூலமாக நிலநடுக்கம் ஏற்பட்டு பர்வதங்கள் அதிர்ந்தாலும், இப்படிப்பட்ட எல்லா ஆபத்துகளும் நேர்ந்தாலும் கடைசி வார்த்தை சொல்கிறது நாம் பயப்படோம் என்பதாக.

கர்த்தர் ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையாக உங்களோடு கூட இருப்பார். ஆகையால் ஒன்றுக்கும் பயப்படாமல் இருங்கள்.

கர்த்தர் தாமே உங்களோடுகூட இருப்பராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *