அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல் வரக்காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன் மேல் பரிசுத்த ஆவி இருந்தார். – Luke 2:25
ஒவ்வவொரு விசுவாசிக்குள்ளும் ஆவியானவர் இருப்பது உண்மைதான் என்றாலும் ஆவியானவர் நம் மேல் இருக்கிற அனுபவம் காணப்படுகிறது. சுருக்கமாக கூறினால் ஆவியானவர் நமக்குள்ளும் (in you ) , நாம் ஆவியானவருக்குள்ளும் (upon you) இருக்கிற வாழ்க்கை.
பரிசுத்த ஆவி நம் மேல் இருக்கும் போது அவர் நம்மை ஆளுகை செய்கிறார் நம்முடைய சிந்தனை செயல்கள் பேச்சு எல்லாவற்றையும் ஆளுகை செய்கிறார். பெலன் உண்டாகிறது (Apo 1:8)
ஆவியில் நிறைந்து வாழுங்கள் என்பது தேவனின் கட்டளை (Eph 5:18) என்றைக்கோ ஒரு நாள் அல்ல! தொடர்ந்து காணப்பட வேண்டிய ஒரு ஜீவியம்.
ஆதி திருச்சபையில் பந்தி விசாரிக்கிற வேலைக்கும் ஆவியில் நிறைந்து காணப்படுகிறவர்களைத்தான் தெரிந்து கொண்டார்கள்.
சிமியோன் என்ற மனிதனின் மேல் பரிசுத்த ஆவி இருந்தார் அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல் வரக்காத்திருக்கிறவனாயும் இருந்தான்.
அபிஷேகம் என்பது மலிவானது அல்ல. நீதியை விரும்பி அக்கிரமத்தை வெறுக்கும் பொது தேவன் நம்மை ஆனந்த தைலத்தால் அபிஷேகிக்கிறார். (Psalm 45:7)
நாம் தேவனின் கடிந்துகொள்ளுதலுக்கு திரும்பும்போது, அவர் தம்முடைய ஆவியையும், வார்த்தையையும் தருகிறார். (Prov 1:23)
நாம் சிறுகும் போது அவர் பெருகுகிறார் (John 3:30).
தொடர்ந்து ஆவியானவரின் நிரப்புதலை அனுபவிப்பதற்கு தொடர்ந்து கீழ்ப்படிதல் அவசியம் (Act 5:32)
ஒரு தேவ ஊழியரிடம் ஆதி சபைக்கும் தற்போதுள்ள சபைக்கும் வித்தியாசம் என்ன ?என்று கேட்ட போது அவர் கூறினார் “ஆவியானவர் இல்லாவிட்டால் ஆதி சபையில் 95% ஊழியம் நின்று விடும், ஆனால் தற்போதுள்ள சபைகளில் ஆவியானவர் இல்லாவிட்டாலும் 95% ஊழியம் எப்பொழுதும் போல் நடக்கும்.”
இன்றைய நாட்களில் நம்முடைய எல்லாவற்றின் மேலும் ஆவியானவர் ஆளுகை செய்வாராக!
“If the Spirit takes charge of your life He will expect unquestioning obedience in everything. He will not tolerate in you the self-sins even though they are permitted and excused by most Christians. By the self-sins I mean self-love, self-pity, self-seeking, self-confidence, self-righteousness, self-aggrandizement, self-defense. – A.W Tozer
Thivakar.B
Word of God Church
Doha – Qatar
www.wogim.org