“கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய்” என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு (சிமியோன்) அறிவிக்கப்பட்டுமிருந்தது – Luke 2:26
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/DfdSqJNnVpQ
ஆவியானவர் இயேசு கிறிஸ்துவின் பக்கமாய் நம்மை திருப்புகிறார். கிறிஸ்துவை நமக்கு வெளிப்படுத்தி காண்பிக்கிறார். கிறிஸ்துவை மகிமைப்படுத்தும்படி செய்கிறார். நம்மை தேவ சாயலாக மாற்றுகிறார்.
நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம் – 2 Cori 3:18
சிமியோன் மேல் ஆவியானவர் இருந்தார் .சிமியோனுக்கு ஒரு மேன்மையான வாக்குத்தத்தை கொடுத்தார். நீ கிறிஸ்துவை காணும் முன்பு மரிக்கமாட்டாய். இந்த வாக்குத்தத்தம் சிமியோனை வயோதிப நாட்களிலும் உற்சாகப்படுத்தியது. ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவை காணும்படி ஏங்கச்செய்தது.
ஆவியானவர் சிமியோன் வாழ்கைக்கு ஒரு தரிசனத்தை கொடுத்தார். நமக்கும் ஆவியானவர் தரிசனங்களை கொடுப்பார்.
தரிசனம் இல்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டு போய்விடுவார்கள் என்று வேதம் சொல்கிறது (Prov 29:18)
தேவ ஜனங்களுக்கு தரிசனங்கள் தேவை! தேவன் நம்மை உண்டாக்கின நோக்கம் என்ன? எதற்காக நம்மை இரட்சித்தார்? எதற்காக நம்மை உயிரோடு வைத்திருக்கிறார் ? நாம் என்ன செய்யவேண்டும் ?என்று நம்முடைய வாழ்கையைக் குறித்து தரிசனம் தேவை.
சிம்சோன் தன் கண்களை இழந்தாலும் அவன் வாழ்கையைக் குறித்த தேவ தரிசனத்தை இழக்கவில்லை. (Lost his eyes but not vision)
அப்போஸ்தலனாகிய பவுலின் வாழ்கை வெற்றியாக முடிந்ததற்கு ஒரு முக்கியமான காரணம் அவர் கிறிஸ்துவை சந்தித்த நாளிலே தன் வாழ்கையைக் குறித்த தேவ திட்டத்தை அறிந்து கொள்ள விரும்பினார்.
ஆவியானவர் வரும் காரியங்களை வெளிப்படுத்துவார்(John 16:13) ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார் (1 Cori 2:10) தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான்(1 Cori 2:11)
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக !
The greatest tragedy in life is not death, but a life without a purpose
Thivakar.B
Word of God Church
Doha – Qatar
www.wogim.org