சங் 2 : 4. பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்.
சங்கீதம் 2ம் அதிகாரத்தை messianic psalm / மேசியாவை பற்றி குறிப்பிட்டுள்ள சங்கீதம் என்று சொல்வார்கள். ஆகிலும் இந்த வார்த்தைகள் நமக்கும் நம்முடைய சூழ்நிலைகளுக்கும் பொருந்துகிறதாய் காணப்படுகிறது.
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/y9UtXNLgqGc
நம்முடைய வாழ்க்கையில் நமக்கு விரோதமாக ஜாதிகள் கொந்தளிக்கலாம், நமக்கு விரோதமாக விருதாகாரியத்தை சிந்திக்கலாம். நமக்கு விரோதமாக அதிகாரிகள், பூமியின் ராஜாக்கள் ஏகமாய் ஆலோசனை பண்ணலாம். இவனை எப்படியாவது கவிழ்த்துவிட வேண்டும், இவனை வேலையிலிருந்தே காலிபண்ணவேண்டும், இவன் உயர்வை தடைசெய்ய வேண்டும், இவர்களெல்லாம் கூட்டம் கூடி கர்த்தரை ஆராதிப்பதிலிருந்து தடை செய்யவேண்டுமென்று அநேக அதிகாரிகள் கூட்டம் கூடி ஆலோசனை பண்ணலாம். ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் இப்படித்தான் அநேக அதிகாரிகள் இளம் வாலிபர்களை ஏவி விட்டு சபையை தடை செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு மாதமும் ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகிறார்கள். மாத்திரமல்ல அவர்கள் கட்டுகளை அறுத்து, அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம் என்கிறார்கள்.
இப்படிப்பட்ட காரியங்களையெல்லாம் செய்பவர்களை, செய்ய தூண்டுகிற சத்துருக்களை கர்த்தர் உன்னதத்திலிருந்து பார்த்து நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார். ஆகையால் உங்களுக்கு எதிராக வருபவர்களை பார்த்து பயப்பட வேண்டாம். இனி காண்கிற எகிப்தியர்களை நீங்கள் இனி காண்பதில்லை; அவர்களை தேடினாலும் கண்டுபிடிக்க மாடீர்கள்; ஒருவழியாய் வருபவர்கள் ஏழு வழியாய் ஓடிப்போவார்கள்; கர்த்தர் உங்களுக்காக யுத்தம் செய்வார். உங்களை சுற்றி படையெடுத்து வருகிற பதினாயிரம் பேருக்கும் நீங்கள் பயப்படாதீர்கள். காரணம் உங்களோடுகூட இருப்பவர் வானத்தையும் பூமியையும் படைத்தவர். அவரை பார்த்து நீங்கள் ஜாதிகளை எனக்கு சுதந்திரமாகவும், பூமியின் எல்லைகளையும் எனக்கு சொந்தமாகவும் தாரும் ஆண்டவரே என்று கேக்கும்போது, கர்த்தர் உங்களுக்கு ஜாதிகளை கொடுப்பார்.
ஆகையால் உங்களுக்கு எதிராக எழுப்புகிற சத்துருவைகுறித்து கவலைப்பட வேண்டாம், பயப்பட வேண்டாம். கர்த்தர் அந்த சத்துருக்களை பார்த்து நகைத்து இகழுவார்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org