மாற் 15:13 ,14. அவனைச் சிலுவையில் அறையும் என்று மறுபடியும் சத்தமிட்டுச் சொன்னார்கள். அதற்குப் பிலாத்து: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும் என்று பின்னும் அதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள்.
பிலாத்து இயேசுவை விடுதலை பண்ணவேண்டுமென்று எண்ணம் கொண்டிருந்தான். காரணம் இயேசு நீதிமான் என்று அவன் கண்டான். மாத்திரமல்ல தன்னுடைய மனைவி நிமித்தமாகவும் இயேசுவை விடுதலை பண்ண வேண்டுமென்று நினைத்தான். யூத ஜனங்களோ பிலாத்துவிடம் இயேசுவை சிலுவையிலறையும்படி சொன்னார்கள். ஏன் இயேசு என்ன பொல்லாப்பு செய்தார் என்று பிலாத்து ஜனங்களை பார்த்து கேட்டபோது யூத ஜனங்கள் இன்னும் அதிகமாக அவரை சிலுவையில் அறையும் என்று கூக்குரலிட்டுச் சொன்னார்கள். பிலாத்து சுமார் 7 முறை இயேசுவை விடுதலையாக்க முயற்சி செய்தான் என்று சொல்லுகிறார்கள். இயேசுவுக்கு பதிலாக பரபாசை விடுதலைக்கும்படி கேட்டுக்கொண்டார்கள்.
ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக் கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று பிலாத்து சொன்னான். அதற்கு ஜனங்களெல்லாரும்: இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள்மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள் (மத் 27:25). யூதர்கள் சொன்ன இந்த வார்த்தையின் படி இரத்தப்பழி அவர்கள் மீதும் அவர்கள் பிள்ளைகள் மீதும் சுமந்து. ஆகையால் தான் தேவ ஜனங்கள் எப்பொழுதும் தங்களுடைய வாயின் வார்த்தையில் கவனமாக இருக்க வேண்டும்.
சரித்திரத்தின்படி AD 69 நவம்பரில் சுமார் 35 லட்சம் யூத ஜனங்கள் இருந்தார்கள். அதே ஆண்டு செப்டம்பரில் சுமார் 11 லட்சம் யூத ஜனங்கள் கொல்லப்பட்டார்கள். சுமார் 20 லட்சம் ஜனங்கள் விற்கப்பட்டார்கள். AD 70 ஆகஸ்டில் சுமார் 80,000 ஆயிரம் யூத ஜனங்கள் மீண்டும் கொல்லப்பட்டார்கள். எருசலேம் முழவதும் இரத்த ஆறாக முழங்கால் அளவிற்கு இரத்தம் ஓடியது என்று சரித்திரம் சொல்லுகிறது. 1876வது வருடம் யூதர்கள் இருப்பதற்கு ஒரு இடம் கூட இல்லை. இரண்டாவது உலக யுத்தத்தில் 1938 – 1945 ஆண்டு வரை சுமார் 65 லட்சம் யூத ஜனங்கள் ஹிட்லரால் கொல்லப்பட்டார்கள். ஹிட்லருக்கு கீழிருந்த நான்கு பேர்களில் ஒருவனுக்கு யூத ஜனங்களை அறவே பிடிக்காதாம். இப்படியாக இயேசுவை சிலுவையில் அறையும் என்று சொன்னதின் மாத்திரமல்ல இரத்தப்பழி எங்கள் மேல் சுமரட்டும் என்ற அவர்களது வார்த்தையின் படி அவர்களே அந்த சாபத்தை வருவித்துக்கொண்டார்கள்.
அன்று யூத ஜனங்கள் இயேசுவை சிலுவையில் அறையும்படி ஒப்புக்கொடுத்தார்கள். இன்று எத்தனைமுறை நாம் இயேசுவை சிலுவையில் அறைந்துகொண்டிருக்கிறோம். நம்முடைய மீறுதல்கள், அக்கிரமங்கள் நிமித்தமாக நாம் இயேசுவை மீண்டும் மீண்டும் சிலுவையிலறைகிறவர்களாக காணப்படுகிறோம். மாத்திரமல்ல நம் மூலமாக மற்றவர்கள் இடறல் அடையும்படியாக செய்கிறோம். இவைகளெல்லாம் சாபத்தை கொண்டுவரும் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
ஆகையால் அந்நாளிலே பாவத்தையும் அழுக்கையும் நீக்க, தாவீதின் குடும்பத்தாருக்கும் எருசலேமின் குடிகளுக்கும் திறக்கப்பட்ட ஒரு ஊற்று உண்டாயிருக்கும் (சகரி 13:1) என்ற வசனத்தின் படி உங்களுக்காக சிலுவையிலிருந்து எப்பொழுதும் ஒரு திறக்கப்பட்ட ஊற்று இருக்கிறது. அந்த ஊற்றிலிருந்து வரும் இரத்தத்தினால் உங்களை இந்நாட்களில் கழுவி சிலுவையில் அறையப்பட்ட இயேசுவை உலகத்திற்கு அறிவிக்க முன்வாருங்கள்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha, Qatar
www.wogim.org