சங் 62:11. தேவன் ஒருதரம் விளம்பினார், இரண்டுதரம் கேட்டிருக்கிறேன்; வல்லமை தேவனுடையது என்பதே.
யார் வல்லமையுள்ளவர் என்ற கேள்வி வந்தபோது, இரும்பிடம் போய் நீ தான் இருப்பதிலேயே வல்லமையுள்ள நபரா என்று கேட்டபோது அது சொல்லியது இல்லை நெருப்பு தான் வல்லமையுள்ளது காரணம் அக்கினி என்னை உறுக்கிவிடும் என்பதாக. அக்கினியிடம் நீ தான் வல்லமையுள்ள நபரா என்று கேட்டபோது அது சொல்லியது இல்லை தண்ணீர் தான் வல்லமையுள்ளது காரணம் அது என்னை அணைத்துவிடும் என்று. தண்ணீரிடம் நீ தான் வல்லமையுள்ள நபரா என்று கேட்டபோது அது சொல்லியது இல்லை சூரியன்தான் வல்லமையுள்ளது காரணம் அது என்னை வற்றிப்போகும்படி செய்துவிடும் என்று. சூரியனிடம் நீ தான் வல்லமையுள்ள நபரா என்று கேட்டபோது அது சொல்லியது மேகம் தான் வல்லமையுள்ளது காரணம் அது என்னை மறைக்கும்படியாக செய்துவிடும் என்பதாக. மேகத்திடம் நீ தான் வல்லமையுள்ள நபரா என்று கேட்டபோது அது சொல்லியது இல்லை காற்று தான் வல்லமையுள்ளது காரணம் காற்று அடிக்கும்போது என்னை அது நகர்த்திவிடும் என்று. காற்றிடம் நீ தான் வல்லமையுள்ள நபரா என்று கேட்டபோது அது சொல்லியது இல்லை மலைகளும் பர்வதங்களும் தான் வல்லமையுள்ளது காரணம் நான் வீசும்போது அது என்னை தடுக்கும் அது என்னை இரண்டாக பிழந்துவிடும் என்று. மலைகளிடம் நீ தான் வல்லமையுள்ள நபரா என்று கேட்டபோது அது சொல்லியது இல்லை மனிதன் தான் வல்லமையுள்ளவன் காரணம் அவன் இயந்திரங்களை கொண்டுவந்து என்னை உடைத்துவிடுவான் என்று. மனிதனிடம் நீ தான் வல்லமையுள்ள நபரா என்று கேட்டபோது அவன் சொன்னான் இல்லை மரணம் தான் வல்லமையுள்ளது காரணம் அது என்னை விழுங்கிவிடும் என்று. மரணத்திடம் நீ தான் வல்லமையுள்ள நபரா என்று கேட்டபோது அது சொல்லியது இல்லை ஒரு காலத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு போன்றோர்கள் மறித்தார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்களின் சந்ததியில் ஒருவர் வந்தார். அவரும் மரித்தார். நான் நினைத்தேன் மரணமாகிய நான் ஜெயித்துவிட்டேன் என்று. ஆனால் அவர் சொன்னபடியே மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார் என்பதாக.
ஆம் இவ்வுலகத்தில் காண்கிற அனைத்தைக்காட்டிலும் வல்லமையுள்ளவர் ஒருவர் மாத்திரமே. அவர் மரித்தேன் ஆனாலும் இதோ சதாகாலமும் உயிரோடிருக்கிறேன் என்று சொன்ன இயேசுகிறிஸ்து. அவரே வல்லமையுள்ளவர். நீங்கள் தாபரமாக கொண்ட உங்கள் இயேசுவே வல்லமையுள்ளவர். உங்களோடு இருக்கிறவர் பெரியவர். ஆகையால் ஒன்றைக்குறித்தும் கவலைப்படாமல் இருங்கள். அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.
கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org