உங்கள் கையில் எதிராளியை ஒப்புக்கொடுத்தார்:-

யோசு 6:2. கர்த்தர் யோசுவாவை நோக்கி: இதோ, எரிகோவையும் அதின் ராஜாவையும் யுத்தவீரரையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்.

ஆண்டவர் யோசுவாவிடம் சொல்லுகிறார் பட்டணத்தை ஏற்கெனவே உன் கையில் ஒப்புக்கொடுத்தேன். சாத்தானுக்கு விரோதமாக யுத்தம் செய்யும்போது இதை தான் தேவ பிள்ளைகள் தெரிந்துகொள்ளவேண்டும். சாத்தான் கல்வாரி சிலுவையில் ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்டு போனான். ஏற்கெனவே சிலுவையில் சாத்தானின் தலையை நசுக்கிப்போட்டார். ஆண்டவர் யோசுவாவிடம் ஏழு நாள் கழித்தோ, ஒரு மாதம் கழித்தோ எரிகோவை ஒப்பு கொடுக்கிறேன் என்று சொல்லவில்லை. மாறாக, ஏற்கெனவே எரிகோ பட்டணத்தை உன் கையில் ஒப்பு கொடுத்தேன். நீ செய்யவேண்டியது போய் சுதந்தரிப்பது என்று சொன்னார்.

எரிகோ பட்டணத்தை இஸ்ரவேல் ஜனங்கள் ஏழு நாளில் பதிமூன்று முறை சுற்றி வந்தார்கள், எக்காளத்தை ஏழாவது நாள் ஊதினார்கள். நாமும்கூட கல்வாரியில் இயேசு மரணத்தை ஜெயித்ததை அறிக்கை செய்கிறவர்களாக காணப்பட வேண்டும். சாத்தான் தோற்கடிக்கப்பட்டுப்போனான் என்று சொல்லி அறிக்கை செய்கிறவர்களாக காணப்படவேண்டும். உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள் (வெளி 12:9). இதை அடிக்கடி நினைவுகூர்ந்து பிசாசு தோற்கடிக்கப்பட்டான் என்று சொல்லி அறிக்கையிட்டு மகிழ்கிறவர்களாக தேவ ஜனங்கள் காணப்பட வேண்டும்.

ஒரு ஊழியக்காரரிடம் ஒரு சகோதரியை ஜெபிக்கும்படி அழைத்துக்கொண்டு வந்தார்கள். அந்த ஊழியக்காரர் சகோதரியை பார்த்து இயேசுவை இரட்சகராக ஏற்றுக்கொண்டு, சாத்தானை பார்த்து நீ தோற்கடிக்கப்பட்டு போனாய், சிலுவையில் இயேசு உன்னை ஜெயித்தார் என்று அறிக்கையிடு என்று சொன்னார். உடனே அந்த சகோதரி நான் எப்பொழுது தோற்கடிக்கப்பட்டு போனேன் என்று கத்தினாள். உடனே அந்த ஊழியக்காரருக்கு தெரியவந்தது அவளுக்குள் பொல்லாத பிசாசு காணப்படுகிறான் என்று சொல்லி, இயேசுவின் நாமத்தில் நீ இவளை விட்டு போ என்று சொன்ன மாத்திரத்தில், அந்த பிசாசு அவளை விட்டு ஓடி போய்விட்டது. பின்பு அந்த சகோதரி சாத்தானை பார்த்து சொன்னால் நீ தோற்கடிக்கப்பட்டவன் என்பதாக. விசுவாசிகள் அநேகர் இதை சொல்லுவதற்கு பயப்படுகிறார்கள். சாத்தான் தன்னை ஏதாவது செய்துவிடுவானோ என்று அவனை உள்ளை வைத்துக்கொள்ளுகிறார்கள். ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள் என்று வசனம் சொல்லுகிறது. ஆகையால் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு எதிராக குமுறுகிற காற்று, ஜலம் போன்ற பிரச்சனைகளை பார்த்து சாத்தானே நீ சிலுவையில் தோற்கடிக்கப்பட்டு போனாய் என்று சத்தமாய் சொல்லுங்கள். அப்படியாக சொல்லும்போது சாத்தானுக்கு அறவே உங்களை பிடிக்காது. அவனுக்கு உங்களை அறவே பிடிக்கவில்லையென்று சொன்னால், நீங்கள் சரியான பாதையில் கடந்து சொல்லுகிறீர்கள் என்று அர்த்தம். ஆகையால் இன்றிலிருந்து அடிக்கடி சொல்லுங்கள் சாத்தானே நீ தோற்கப்பட்டு போனாய். சிலுவையில் என் இயேசு உன்னை ஜெயித்தார் என்பதாக.

உங்களுக்கு முன்பாக எரிகோக்களை ஏற்கெனவே உங்களுக்கு கொடுத்துவிட்டார். இப்பொழுது அறிக்கையிட்டு சுதந்தரிப்பது தான் உங்கள் வேலை. எரிகோ உங்கள் பட்சம்.

காத்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *