உதடுகளை மூடுவதா?

தன் உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்.

ஒரு சிலர் பேச ஆரம்பித்தாள் அவ்வளவு தான்; அவர்கள் எப்பொழுது தங்கள் வாயை மூடுவார்கள் என்பதை போல ஆகிவிடும். தாங்கள் பேசினால் தான் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கமுடியும் என்றெண்ணி, எல்லாரும் அவர்களை பார்த்ததும் ஓடி ஒளியும் அளவிற்கு செய்துவிடுவார்கள். ஒரு ஊரில் வாயாடி என்று சொல்லப்படும் சகோதிரி ஒருவள் இருந்தாள். அவள் தெருக்களில் நடக்கும்போது எல்லாருடைய வீட்டிலும் நின்று அவர்களின் சுக செய்தியை கேட்பதைப்போல கேட்டு மற்றவர்களை பற்றி அவதூறு பேசுவதும், குறை சொல்வதும், தாழ்த்தி பேசுவதையுமே தன் வழக்கமாக வைத்திருந்தாள். தன்னுடைய உதட்டை மூடினதாக சரித்திரமே இல்லை. இந்த வாயாடி பெண்ணை பார்த்த ஊர் ஜனங்கள் அவள் வந்தாலே கதவை பூட்டும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இப்படியாக தான் அநேகர் தங்கள் உதட்டை மூடாமல் ஒரு பாடலை பார்வேர்ட் பண்ணி கேட்டால் எப்படி இருக்குமோ அதுபோல பேசுகிறவர்களாக காணப்படுகிறோம். சபையில் ஸ்த்ரிகள் பேசக்கூடாது என்று எழுதப்பட்டதிற்கான காரணமே இப்படிபோன்ற வாயடிகளை நிறுத்தவேண்டும் என்று கூட இருக்கலாம்.

சரி பெண்கள் தான் வாயாடி என்று நினைத்தாள், ஆண்கள் அதற்கு மேல். ஒரு சபையில் இருந்த விசுவாசி இரவெல்லாம் மதுபானத்தை குடித்துவிட்டு, காலையில் எழுந்து சபைக்கு சென்று ஒரே அந்நியபாஷை தான். சபை போதகர் ஏன் போன வாரம் சபைக்கு வரவில்லை என்று கேட்டால் எனக்கு வயித்து வலி, அலுவலகத்தில் வேலைக்கு கூப்பிட்டு விட்டார்கள் என்று ஒரே பொய். கிரேத்தாதீவார் ஓயாப்பொய்யர், துஷ்டமிருகங்கள், பெருவயிற்றுச் சோம்பேறிகள் என்று அவர்களில் ஒருவனாகிய அவர்கள் தீர்க்கதரிசியானவனே சொல்லியிருக்கிறான் (தீத்து 1:12) என்பதை போல சிலர் பொய் பேசுவதில் தங்கள் உதட்டை மூடாமல் இருப்பார்கள்.

கர்த்தருடைய ஜனங்கள் தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்கவேண்டும். மூடன் மிகுதியாய்ப் பேசுகிறான். சொற்களின் மிகுதியில் பாவம் இருக்கும். எதை எந்த நேரத்தில் பேசவேண்டும் என்பதை கர்த்தருடைய ஜனங்கள் அறிந்து ஞானத்துடன் பேசவேண்டும். அப்படி சரியான நேரத்தில் சமயத்திற்கு ஏற்றவாறு பேசுவீர்களென்றால் நீங்கள் புத்திமான்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *