நாம் எப்படி காணிக்கை கொடுக்க வேண்டும் என்பதை குறித்து 5 காரியங்களை தியானிப்போம்.
- மனப்பூர்வமாய், உற்சாகமாய் கொடுக்க வேண்டும்:
தேவனுக்கென்று நாம் ஒன்றை செய்யும் போது மனப்பூர்வமாய் செய்யவேண்டும்: அதைப்போல கொடுக்கும்போது மனப்பூர்வமாய் கொடுக்க வேண்டும். “மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ அவனிடத்தில் எனக்கு காணிக்கையை வாங்குவீர்களாக” என்று யாத்திராகமம்25:2ல் வேதம் சொல்கிறது. “உற்சாகமாய் கொடுக்கிறவன் இடத்தில் தேவன் பிரியமாய் இருக்கிறார்” – 2 கொரிந்தியர் 9:7
- சுத்தமான காணிக்கை செலுத்த வேண்டும்:
எல்லா இடங்களிலும் என் நாமத்துக்குத் தூபமும் சுத்தமான காணிக்கையும் செலுத்தப்படும் – மல்கியா 1:11.
நேர்மையான முறையில் சம்பாதித்த வருமானத்தை தான் தேவனுக்கு காணிக்கையாக செலுத்த வேண்டும்.
யூதாஸ்காரியோத்து இயேசு கிறிஸ்துவை காட்டிக் கொடுத்து, அதன் மூலம் 30 வெள்ளிக் காசு சம்பாதித்தான் ஆனால் பின்பு அந்த காசை தேவாலயத்தில் எறிந்து விட்டு தற்கொலை செய்து கொண்டான். பிரதான ஆசாரியர் அந்த வெள்ளி காசை எடுத்து இதைக் காணிக்கைப் பெட்டியில் போடலாகாது என்று சொல்லி அந்நியரை அடக்கம் பண்ணுவதற்கு குயவன் நிலத்தை அதனால் கொண்டார்கள்.
- சந்தோஷத்துடன் கொடுக்கவேண்டும்:
மக்கதோனியா சபை மிகுந்த உபத்திரவத்தினால் சோதிக்கப்பட்டது: கொடிய தரித்திரம் உடையவர்களாய் இருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினால் மிகுந்த உதாரத்துவமாய் கொடுத்தார்கள் – – 2 கொரிந்தியர் 8:2
- சிறந்ததை தேவனுக்கு கொடுக்கவேண்டும்:
ஆபேல் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழு மையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். – ஆதியாகமம் 4:4. நாம் தேவனுக்கு சிறந்தவற்றை செலுத்த வேண்டும்
- தாழ்வில் தேவன் நம்மை நினைத்ததை நினைவுகூர்ந்து கொடுக்க வேண்டும்:
உபாகமம் 26ம் அதிகாரத்தில் இஸ்ரவேலர்கள் முதல் பலனை தேவனிடம் கொண்டுபோய், தங்கள் முற்பிதாக்கள் பரதேசியாய் அலைந்ததையும், எகிப்திலே தேவன் பெருகப்பண்ணினதையும், பின்பு எகிப்தியர் ஒடுக்கினத்தையும், தங்கள் சிறுமையையும் வருத்தத்தையும் தேவன் பார்த்து. அதிசயமாய் விடுவித்து, பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் கொண்டு வந்ததை நினைத்து, அறிக்கையிட்டு, முதல் பலனை செலுத்த வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார்.
நாமும் நம்முடைய தாழ்வில் தேவன் நம்மை நினைத்து, எவ்வளவாய் நம்மை நடத்தினார் என்பதை அறிக்கையிட்டு தேவனுக்கு காணிக்கை செலுத்த வேண்டும்.
தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக !
Thivakar.B
Word of God Church
Doha – Qatar
www.wogim.org