எப்படி காணிக்கை கொடுக்கக் கூடாது?

நாம் எப்படி காணிக்கை கொடுக்கக் கூடாது என்பதை குறித்து 5 காரியங்களை தியானிப்போம்.

  1. வருத்தத்தோடோ அல்லது கட்டாயத்தினாலோ கொடுக்கக்கூடாது:

இவ்வளவு பணம் கொடுக்க வேண்டுமே என்ற வருத்தத்துடனோ அல்லது கட்டாயத்தினாலோ, நிர்பந்தத்தினாலோ தேவனுக்கு காணிக்கை செலுத்த கூடாது. – 2 கொரிந்தியர் 9:7

  1. இரண்டாம் தரமான அல்லது மட்டமானதை தேவனுக்கு கொடுக்கக்கூடாது:

“இதோ, இது எவ்வளவு வருத்தமென்று சொல்லி, அதை ஒரு திரணமாய்ப் பேசி, பீறுண்டதையும் கால் ஊனமானதையும் நசல்கொண்டதையும் கொண்டுவந்து காணிக்கையாகச் செலுத்துகிறீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அதை உங்கள் கைகளில் அங்கீகரித்துக்கொள்வேனோ என்று கர்த்தர் கேட்கிறார்”. – மல்கியா 1:13

  1. தவறான வருமானத்தில் இருந்து தேவனுக்கு காணிக்கை செலுத்த கூடாது:

“வேசிப்பணயத்தையும், நாயின் கிரயத்தையும் எந்தப் பொருத்தனையினாலாகிலும் உன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கொண்டுவராயாக; அவைகள் இரண்டும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவைகள்”. – உபாகமம் 23:18

இழிவான வழியில் சம்பாதித்த வருமானம் தேவனுக்கு அருவருப்பானது: அப்படிப்பட்ட காணிக்கையை தேவனுக்கு செலுத்தக்கூடாது.

  1. இலவசமாய் பெற்றதையோ / நமக்கு ஒரு பொருட்டு இல்லாத ஒன்றையோ தேவனுக்கு செலுத்தக்கூடாது:

“ராஜா அர்வனாவைப் பார்த்து: அப்படியல்ல; நான் இலவசமாய் வாங்கி, என் தேவனாகிய கர்த்தருக்கு சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தாமல், அதை உன் கையிலே விலைக்கிரயமாய் வாங்குவேன் என்று சொல்லி, தாவீது அந்தக் களத்தையும் மாடுகளையும் ஐம்பது சேக்கல் நிறை வெள்ளிக்குக் கொண்டான்”. – II சாமுவேல் 24:24

  1. மனிதர்கள் காண வேண்டும் என்பதற்காகவோ/ விளம்பரத்துக்காக தேவனுக்கு காணிக்கை செலுத்த கூடாது:

தேவன் இருதயத்தை பார்க்கிறார். நாம் என்ன செய்கிறோம்? என்பதை விட ஏன் செய்கிறோம்? என்பது முக்கியமானது. மனிதர்கள் காண வேண்டும் என்றோ அல்லது மற்றவர்கள் புகழ வேண்டும் என்பதற்காகவோ நாம் காணிக்கை செலுத்தக்கூடாது. (அப்போஸ்தலர் 5:1-10)

தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக !

Thivakar.B
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *