மத் 23:37. எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/0M8X2CTFhE4
இயேசு மேற்குறிப்பிட்ட தன்னுடைய புலம்பலை கோழி மற்றும் குஞ்சுகளை ஒப்புமைப்படுத்தி கூறுகிறார். காரணம் அவருடைய தெய்வீக பொறுமையை ஜனங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே கோழி மற்றும் குஞ்சுகளை எடுத்துக்காட்டாக கூறுகிறார். இயேசு நம்மை போல ஆத்திரப்படுகிறவரும், பொறுமையை இழக்கிறவருகிறவருமாக இருந்திருப்பாரென்றால், இன்று நாம் இப்பூவுலகில் வாழ்வதற்கு தகுதியை இழந்து, எரிகிற நரகத்தில் தான் இருந்திருப்போம். ஆனால் இயேசு மிகவும் பொறுமையுள்ளவராக, உங்களுக்காக இன்னும் பிதாவினடத்தில் பரிந்து பேசுகிறவராக காணப்படுகிறார்.
கழுகு பறந்து வரும்போது, கோழி தன் குஞ்சுகளை சீக்கிரத்தில் அழைக்கும். தாயின் சத்தத்திற்கு கீழ்ப்படிந்து கோழியின் செட்டைகளுக்குள் தங்களை ஒழித்துக்கொள்ளும் குஞ்சுகள், கழுகிற்கு தப்புவிக்கப்படும். கோழியின் செட்டைகளுக்குள் வராத குஞ்சுகள் கழுகிற்கு இறையாகிவிடும். அதுபோல தான் இயேசு எருசலேமை சேர்த்துக்கொள்ள மிகவும் மனதுடையவராக காணப்பட்டு அவருடைய செட்டைகளுக்குள் வந்து ஒழித்துக்கொள்ளும்படி அழைத்தார். ஆனால் எருசலேமோ அதை கேட்க தவறிவிட்டது. எருசலேம் அழகான பட்டணம், பூரிப்பான பட்டணம். ஆனால் எருசலேமுக்கு எதிரிகள் இல்லாத காலமே கிடையாது. எல்லா கால கட்டத்திலும் எருசலேமுக்கு எதிராக திரளான ஜனங்கள் எழும்பினார்கள். ஆனால் யெகோவா தேவனின் செட்டைகளே அவர்களுக்கு அடைக்கலமாக இருந்தது. உங்களுக்கும் யெகோவா தேவனின் செட்டைகளே அடைக்கலமாக இருக்கும்.
இன்றும் ஆண்டவர் அவருடைய செட்டைகளுக்குள்ளே வரும்படியாக அழைக்கிறார். பரிசுத்த ஆவியானவர் இதை செய்யாதே என்று உணர்த்தும்போது அவருடைய சத்தத்திற்கு கீழ்ப்படிந்து இயேசுவின் செட்டைகளுக்குள் வந்தால் நமக்கு பாதுகாப்பு. அடைப்பை பிடுங்கினால் பாம்பு கடிக்கும். அவருடைய சத்தத்தை நிராகரிப்போம் என்றால் கழுகுக்கு இறையாகிவிட வேண்டிய சூழ்நிலை வரும் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். தேவனுடைய பொறுமையை நாம் அசட்டைபண்ணிவிட கூடாது. பவுல் சொல்லும்போது சொல்லுவான் தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடியசாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ? (ரோம 2:4) என்பதாக. ஆண்டவருடைய பொறுமையை அசட்டை செய்யாமல் அவருடைய செட்டைகளுக்குள் கடந்து செல்லுங்கள். அப்பொழுது கர்த்தர் உங்களை பாதுகாத்துக்கொள்ளுவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
www.wogim.org
Doha, Qatar