அதிகாரிகள் துணைநிற்பார்கள்(God will make officials to help you).

நாடுகளின் சகல அதிகாரிகளும்,    தேசாதிபதிகளும்,    துரைகளும்,    ராஜாவின் காரியங்களை நடப்பிக்கிறவர்களும்,    யூதருக்குத்  துணைநின்றார்கள், மொர்தெகாயினால் உண்டான பயங்கரம் அவர்களைப் பிடித்தது(எஸ்தர் 9:3).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/Te2ccsHgt1M

எஸ்தர் ராஜாத்தியின் நாட்களில்,    ஆமானின்  சதித்திட்டத்தினிமித்தம் இந்து தேசம் முதல் எத்தியோப்பியா தேசம் வரைக்கும் காணப்பட்ட யூதர்களை ஒரே நாளில் கொன்றுகுவிக்கும் படிக்கு ராஜாவினால் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. எஸ்தரும்,    மொர்தேகாயும்,    சகல யூதரும் உபவாசம் பண்ணி தேவனுடைய  சமூகத்தைத் தேடினார்கள். ஆகையால் யூதரின் பகைஞர் அவர்களை மேற்கொள்ளலாம்  என்று நம்பின  அந்நாளில்தானே,    யூதரானவர்கள்  தங்கள் பகைஞரை மேற்கொள்ளும் படிக்கு,    கர்த்தர் காரியங்களை மாறுதலாய் முடியும் படிக்குச் செய்தார். யூதருக்குள்ளே அது மகிழ்ச்சியும்,    களிப்பும்,    விருந்துண்டு கொண்டாடும் நல்ல நாளுமாயிருந்தது. சகல அதிகாரிகளும்,    தேசாதிபதிகளும்,    துரைகளும்,    ராஜாவின் காரியங்களை நடப்பிருக்கிறவர்களும்,   யூதருக்குத் துணைநின்றார்கள். அதுவரைக்கும் எதிராய் காணப்பட்ட அத்தனை அதிகாரிகளையும் கர்த்தர் யூதர்களின் பக்கம் திருப்பினார். யூதர்களின் காரியம் ஜெயமாயிருந்தது.

கர்த்தருடைய பிள்ளைகளே,    வேலை ஸ்தலங்களில் உங்கள் அதிகாரிகள் உங்களுக்கு எதிராய் காணப்படுகிறார்களா? உண்மையும் உத்தமத்தோடும் வேலை செய்தும் அற்பமாய் கருதப்படுகிறீர்களா? காரணமில்லாமல் நெருக்கப்படுகிறீர்களா? கவலைப்படாதிருங்கள். கர்த்தர் காரியங்களை மாறுதலாய் முடியப்பண்ணுவார். உங்கள் அதிகாரிகளை உங்கள் பட்சமாய் கர்த்தர் திருப்புவார். சத்துருக்கள் முன்பாக உங்கள் தலையை உயரும் படிக்குச் செய்வார்.  அதுபோல பலவிதமான அனுமதிகளுக்காக அரசு அலுவலகங்களின் கதவுகளைத் தட்டிக்கொண்டு ஒருவேளை நீங்கள் காணப்படலாம்.  அடைக்கப்பட்ட வாசல்கள் உங்களுக்கு முன்பாக காணப்படக் கூடும். ராஜாக்களின் இருதயத்தைக் கர்த்தர் தம்முடைய கரத்தில் நீர்க்கால்கள் போல் வைத்திருக்கிறார்,    தமக்குச் சித்தமானபடி அவைகளைத் திருப்ப வல்லமையுள்ளவர். கர்த்தர் காலத்தையும் சமயத்தையும் மாற்றுகிறவர் என்று வேதம் கூறுகிறது. அவர் பட்சிக்கிறவனிடத்திலிருந்து பட்சணத்தையும்,    பலவானிடத்திலிருந்து மதுரத்தையும் தருகிறவர்.  அதிகாரிகளையும்,    ஆளுகை செய்கிறவர்களையும் கர்த்தர் உங்கள் பக்கமாய் திருப்புவார். அவர்கள் கல்லான இருதயங்களை உடைத்து சதையான இருதயமாய் மாற்றுவார். அவர்களை வைத்தே உங்கள் காரியங்களைச் செய்து முடிப்பார். அப்போது உங்களுக்கு மகிழ்ச்சியும்,    சந்தோஷமும் உண்டாகும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *