பலிபீடத்தின்மேல் அக்கினி எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்க வேண்டும், அது ஒருபொழுதும் அவிந்துபோகலாகாது (லேவி. 6:13).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/hQh9JUPrphE
இஸ்ரவேல் சபை வனாந்தரத்தில் காணப்பட்ட வேளையில், கர்த்தர் அவர்கள் நடுவில் வந்து வாசம் பண்ண, ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டும்படிக்கு சொன்னார். மோசே கர்த்தர் கொடுத்த மாதிரியின்படி ஆசரிப்புக் கூடாரத்தைச் செய்வித்தான், ஆகையால் தேவ மகிமை அங்கே தங்கியிருந்தது. அதின் பிரகாரத்தில் வெண்கல பலிபீடத்தைதை பலிசெலுத்தும் படிக்கு வைக்கக் கர்த்தர் கட்டளையிட்டார். அந்த பலிபீடத்தின்மேல் அக்கினி எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்க வேண்டும், அது ஒருபொழுதும் அவிந்துபோகலாகாது என்பது கர்த்தருடைய கட்டளை. இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் பாவங்களுக்காக சர்வாங்க தகனபலிகளை அதின்மேல் செலுத்துவார்கள், அப்போது கர்த்தர் அவர்களை நினைத்தருளி அவர்களுடைய மீறுதல்களை மன்னிப்பார்.
இயேசு அந்த அக்கினியை நம் உள்ளங்களில் போடும் படிக்கு வந்தார். பூமியில் காணப்படுகிற ஜனங்கள் மேல் அக்கினியைப் போடவந்தேன், அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன் என்று கூறினார். ஆகையால் நம்முடைய இருதயமாகிய பலிபீடத்தின் மேல் கர்த்தருடைய அக்கினி எப்பொழுதும் எரிந்து கொண்டிருக்க வேண்டும், அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன? எலியாவின் நாட்களில் இடிந்து போன பலிபீடங்களை அவன் செப்பனிட்டு கர்த்தரை நோக்கிக் கூப்பிட்ட வேளையில் அக்கினி இறங்கினது. கர்த்தருடைய பிள்ளைகளே, ஒருவேளை உங்கள் தனிப்பட்ட, குடும்ப பலிபீடங்கள் இடிந்து காணப்படுமே என்றால் உடனடியாக செப்பனிடுங்கள். மேட்டிமையான சிந்தையோடு, நான் என்ற எண்ணங்களோடு, சுயம் சாகாதபடிக்கு காணப்படுகிற வாழ்க்கைகள் சரிசெய்யப்படவேண்டும். ஆவிக்குரிய சபையில் அனேக வருடங்களாய் காணப்படுவோம், ஆனால் சுபாவங்களில் ஒரு மாற்றமும் இருப்பதில்லை, அப்படிப்பட்ட வாழ்க்கைகள் செப்பனிடப்படும் போது தேவ அக்கினி நமக்குள் பற்றியெரியும். மேலும் இரவும் பகலும் கர்த்தருடைய வார்த்தையின் மேல் தியானமாய் இருக்கும் போது, தேவ வார்த்தை உங்கள் எலும்புகளுக்குள் அடைபட்டு எரிகிற அக்கினியாய், உங்கள் இருதயத்தில் காணப்படும். சங்கீதக் காரன் கூறினான், என் இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது, நான் தியானிக்கையில் அக்கினி மூண்டது அப்பொழுது என் நாவினால் விண்ணப்பம் செய்தேன் என்பதாக. கர்த்தருடைய வார்த்தையைத் தியானிக்கும் போது, நம்முடைய இருதயங்கள் அனல் கொள்ளட்டும், அதினிமித்தம் ஜெபிக்கிறவர்களாய் காணப்படுங்கள். அதுபோல ஒருமனதோடு தேவ சமூகத்தில் காணப்படும் போது அக்கினி இறங்கும். மேல்வீட்டறையில நூற்றியிருபது பேர் ஒருமனதோடு கூடி வந்த வேளையில் ஆவியானவர் அக்கினியாய் இறங்கிவந்தார், அக்கினி மயமான நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்தது. ஆகையால் ஆதிசபை பலமுள்ளதாய் காணப்பட்டது. இந்நாட்களில் சபைகள் சாரமற்றதாகவும், ஒருமனமில்லாமலும், பலமில்லாமலும் காணப்படுவதின் காரியம், கர்த்தருடைய அக்கினியை இழந்து போனதின் நிமித்தமாய் காணப்படுகிறது.
கர்த்தருடைய பிள்ளைகளே, உங்களுக்குள் எரிகிற அக்கினியை அனல் மூட்டுங்கள். அது மற்றவர்களை உங்களண்டை இழுத்துக் கொண்டு வரும். ஒருபோதும் அக்கினியை அவிந்துபோகும் படிக்குச் செய்துவிடாதிருங்கள். முட்செடியில் எரிந்த அக்கினி மோசேயை கிட்டி இழுத்தது. யோவான் ஸ்நானகனுக்குள் எரிந்த அக்கினி அனேகரை அவனண்டை இழுத்தது, அவனுடைய வெளிச்சத்தில் நடக்க அனேகர் மனதாயிருந்தார்கள் என்று வேதம் கூறுகிறது. நம்மிலும், நம்முடைய சபைகளிலும் ஆவியானவருடைய அபிஷேக அக்கினி பற்றியெரியட்டும், அது திரளான ஜனங்களை ஆண்டவரண்டை இழுத்துக் கொண்டு வரும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae