தேவனின் கண் உங்கள் மேல் வைக்கப்பட்டிருக்கிறது (The eye of God is on you).

எஸ்றா 5:5. ஆனாலும் இந்தச் செய்தி தரியுவினிடத்திற்குப் போய் எட்டுகிறவரைக்கும் இவர்கள் யூதருடைய மூப்பரின் வேலையைத் தடுக்காதபடிக்கு, அவர்களுடைய தேவனின் கண் அவர்கள்மேல் வைக்கப்பட்டிருந்தது; அப்பொழுது இதைக்குறித்து அவர்கள் சொன்ன மறுமொழியைக் கடிதத்தில் எழுதியனுப்பினார்கள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/UKLaFFis4LA

யூத ஜனங்கள் பாபிலோனிலிருந்து எருசலேமிற்கு திரும்பி வந்து பல வருடங்கள் ஆலயம் கட்டப்படுவது தடைபட்டுபோனது (4:24). இதற்கு காரணம் என்ன என்பதை ஆகாய் 1:1-4 வரையுள்ள வசனங்களை வாசிக்கும்போது அறிந்துகொள்ளலாம். இந்த ஜனங்கள் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு ஏற்றகாலம் இன்னும் வரவில்லை என்ற அஜாக்கிரதை உடையவர்களாய் காணப்பட்டார்கள். இப்படிப்பட்ட அஜாக்கிரதை இந்நாட்களில் கர்த்தருடைய ஆலயத்தை குறித்த காரியங்களில் நமக்கு வராமல் இருக்க ஆவியானவர் தாமே துணை செய்வாராக. இன்னும் ஆகாய் தீர்க்கதரிசி சொல்லுவார், இந்த வீடு பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் மச்சுப்பாவப்பட்ட உங்கள் வீடுகளில் குடியிருக்கும்படியான காலம் இதுவோ? என்பதாக. ஜனங்கள் தங்களுக்கு பெரிய பெரிய வீடுகளை கட்டுவதில் தங்களை பரபரப்பாக வைத்து கொண்டார்கள். நமக்கு வீடுகளை கட்டுவது நல்லது. நாமெல்லாரும் நல்ல வீடுகளில் தான் இருக்க வேண்டும் என்று கர்த்தர் விருப்பமுள்ளவராய் இருக்கிறார். ஆனால் தங்கள் வீடுகளை மாத்திரம் கவனத்தில் வைத்துக்கொண்டு கர்த்தருடைய ஆலயத்தை குறித்த கவலையும் நோக்கமும் இல்லாத ஜனங்களாக நாம் இருக்கலாகாது.

இந்த ஆலயத்தைக் கட்டவும், இந்த மதிலை எடுப்பிக்கவும் உங்களுக்குக் கட்டளையிட்டவன் யார் என்று எதிரிகள் கேட்டார்கள். எதிரிகள் கொடுத்த செய்தி தரியு ராஜாவை எட்டும் வரைக்கும் ஆலய கட்டுமான பணிகள் தடையாகவில்லை. காரணம் தேவனின் கண் கர்த்தருடைய ஜனங்கள் மேல் வைக்கப்பட்டிருந்தது. இது கர்த்தர் கொடுக்கிற வாக்குத்தத்தமாய் காணப்படுகிறது. இஸ்ரவேலை காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குவதுமில்லை என்ற வசனத்தின்படி தூங்காமல் காக்கிற கண்களை உடையவர் நம் கர்த்தர். நோவாவுக்கு கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது. லோத்து சொல்லுவான் உமது கண்களில் உமது அடியேனுக்குக் கிருபை கிடைத்ததே (ஆதி 19:19) என்பதாக. கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது (சங் 34:15). இயேசுவின் சிலுவை பிரயாணத்தில், அவருடைய கண்களைக் கட்டி, அவருடைய முகத்தில் அறைந்து: உன்னை அடித்தவன் யார், அதை ஞானதிருஷ்டியினால் சொல் என்று கேட்டார்கள் (லுக் 22:64). இயேசுவின் கண்களை கட்டி அவரை அடித்தார்கள். ஆனால் அவருடைய கண்களோ கிருபை நிறைந்த கண்கள், தயவு நிறைந்த கண்கள், பாவத்தை பாராத சுத்த கண்களை உடையவர். அவருடைய கண்கள் உங்கள் ஒவ்வொருவரையும் பாதுகாக்கும், மறைவான கன்னிகளுக்கு விலக்கி தப்புவிக்கும், கண்ணின் மணி போல உங்களை பாதுகாத்துக்கொள்ளுவார். கர்த்தருடைய காரியங்களை திரும்பவும் நீங்கள் செய்யும் போது அவருடைய கண்கள், எதிரிகளின் வன்மங்களுக்கு உங்களை தப்புவிக்கும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *