நன்மையான ஈவும் பூரணமான வரமும் (Good and perfect gift)

நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை. (யாக்கோபு 1:17)

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/kZuXMA7RjjM

நம்ம அன்றாட வாழ்க்கை வாழ்வதற்கு நமக்கு தேவைகள் அதிகம் காணப்படுகிறது. நாம் அன்றாடம் நம்முடைய தேவைக்காக அநேக பிரயாசங்களை எடுக்கிறோம் , அனால் அதற்கேற்ற பலன் நமக்கு கிடைப்பதில்லை. நம்முடைய உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லையே என்ற கவலையில் அநேகம் பேர் உண்டு .

நம் தேவைகளை சந்திக்கிறவர் கர்த்தர் . நமக்கேற்ற ஈவுகள் அவர் கரத்திலுருந்து கிடைக்கிறது . அவை நன்மையையும் , பூரணமானவைகள் . உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும் (சங்கீதம் 128: 2) என்று சங்கீதக்காரன் பாடுகிறான்

நமக்கேற்ற பலன் நமக்கு கிடைக்கவேண்டுமென்பது கர்த்தருடைய விருப்பம் . ஆனால் அவருடைய தயவு இல்லாமல் ஒன்றும் நமக்கு வாய்ப்பதில்லை .அன்றியும் மனுஷர் யாவரும் புசித்துக் குடித்துத் தங்கள் சகலப் பிரயாசத்தின் பலனையும் அநுபவிப்பது தேவனுடைய அநுக்கிரகம்.(பிரசங்கி 3:13) என்று வேதம் கூறுகிறது.

என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும். (சங்கீதம் 62:5) என்று தாவீது பாடுகிறது போல், நம் கண்கள் அவரை நோக்கும்போது அவர் நம்முடைய தேவைகளை சந்திக்கிறார்.

தேவன் நமக்கு நல்ல ஈவுகளை கொடுக்கும்போது , நாம் என்ன செய்யவேண்டும் என்பதை வேதம் நமக்கு கற்றுக்கொடுக்கிறது .
முதலாவதாக அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்தவேண்டும். தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்.( II கொரி 9:15) என்று பவுல் கொரிந்து சபைக்கு எழுதுகிறார். நாம் எல்லா சூழ்நிலைக்காகவும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்த வேண்டும் .

இரண்டாவதாக நாம் தேவையோடு இருப்பவர்களுக்கு உதவி செய்யவேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறவராக இருக்கிறார் . இதைத்தான் பேதுரு , அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள். (1 பேதுரு 4:10) என்று எழுதுகிறார்

மூன்றாவதாக கர்த்தர் நம்மை ஆசிர்வதித்ததற்கு தக்கதாக அவருக்கு காணிக்கைகளை செலுத்தவேண்டும் என்று விரும்புகிறார். மோசே இஸ்ரவேல் ஜனங்களிளிடத்தில் “கர்த்தருடைய சந்நிதியில் வெறுங்கையோடே வராமல், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அருளிய ஆசீர்வாதத்திற்குத்தக்கதாக, அவனவன் தன் தன் தகுதிக்கு ஏற்றபடி காணிக்கையைக் கொண்டுவரக்கடவன் (உபாகமம் 16:17) என்று உபதேசிக்கிறார்.

நாம் கர்த்தருக்கு பயந்து அவருடைய கற்பனைகளை கைக்கொள்ளும்போது எந்த வேற்றுமையின்றி நம்முடைய தேவைகளை அவர் நிறைவேற்றுவார் . நன்மையான ஈவுகள் அவர் கரத்திலிருந்து வருகிறது . அது என்றும் பூரணமானது . நாம் கர்த்தாரிடத்திலிருந்து நல்ல நன்மைகளை பெறும்போது , அவருக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, தேவையோடு இருப்பவர்களுக்கு உதவி, கர்த்தருக்கு ஏற்ற காணிக்கைகளை செலுத்தகடவோம்.


கர்த்தர்தாமே உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்

Bro. Jeyasam
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *