இது காலமா? (Is this the time?).

அப்பொழுது அவன் இவனைப்பார்த்து: அந்த மனுஷன் உனக்கு எதிர்கொண்டுவரத் தன் இரதத்திலிருந்து இறங்கித் திரும்புகிறபோது என் மனம் உன்னுடன்கூடச் செல்லவில்லையா? பணத்தை வாங்குகிறதற்கும்,     வஸ்திரங்களையும்,     ஒலிவத்தோப்புகளையும்  திராட்சத்தோட்டங்களையும் ஆடுமாடுகளையும் வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் வாங்குகிறதற்கும் இது காலமா? (2 இரா. 5:26).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/YUYlm8wF8yw

எலியாவின் கைகளுக்குத் தண்ணீர் வார்த்து ஒரு வேலைக்காரனைப் போலக் காணப்பட்டவன் எலிசா. எலியா அக்கினி இரதத்தில் ஆண்டவரால் எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்பு,     அவனிடத்தில் காணப்பட்ட அபிஷேகத்தை எலிசா வாஞ்சித்து இரட்டிப்பாய் பெற்றுக் கொண்டான்.  எலியாவிற்கு பின்பு கர்த்தருடைய மகிமையான தீர்க்கதரிசன ஊழியத்தை அற்புத அடையாளங்கள் மூலம் நிறைவேற்றினான். அவனுக்கு ஒரு வேலைக்காரன் காணப்பட்டான். அவனுடைய பெயர் கேயாசி,     அவன் எலிசாவிற்கு பின்பு அவனுடைய அபிஷேகத்தை நான்கு மடங்கு பெற்று ஊழியம் செய்ய வேண்டியவன். ஆனால் நாகமானின் குஷ்ட ரோகத்தை அவனுக்கும் அவன் சந்ததிக்கும் சம்பாதித்து வைக்கிறவனாய் காணப்பட்டான். அதற்குக் காரணம்,     அவனுடைய இருதயம் கர்த்தரைச் சார்ந்து காணப்படுவதற்குப்  பதிலாகப் பொருளாசையைச் சார்ந்து காணப்பட்டது. எலிசா அவனுக்கு முன்பு நல்ல ஒரு முன்மாதிரியின் வாழ்க்கையை வைத்தான். நாகமான்  பத்துத் தாலந்து வெள்ளியையும்,     ஆறாயிரம் சேக்கல் நிறை பொன்னையும்,     பத்து மாற்றுவ ஸ்திரங்களையும்  கொண்டுவந்திருந்தும்,     அவைகளின் மேல் ஆசைகொள்ளாதபடி,     அவனண்டைக்கு கூட செல்லாதபடி,     தன் வேலைக்காரனை அனுப்பி யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம் பண்ணு,     அப்பொழுது உன் மாம்சம் மாறி,     நீ சுத்தமாவாய் என்று சொல்லச்சொன்னான். ஆனால் அவனுடைய வேலைக்காரன் அவன் மாதிரியைப் பின்பற்றாமல் ஒரு தாலந்து வெள்ளிக்காகவும்,     இரண்டு மாற்றுவ ஸ்திரங்களுக்காகவும் நாகமானின் பின்சென்று அவன் குஷ்ட ரோகத்தைப் பெற்றுக் கொண்டான். 

கர்த்தருடைய பிள்ளைகளே,     உங்கள் இருதயம் ஒரு நாளும் பொருளாசையைச் சார்ந்து கொள்ளுவதற்கு இடம் கொடாதிருங்கள். இயேசு,     பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்,     ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான  ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்று நம்மை எச்சரித்திருக்கிறார். நம்முடைய ஆஸ்தி ஐசுவரியங்கள் ஒரு நாளும் நம்மை நித்திய ஜீவனுக்குள்,     அதாவது பரலோகத்திற்கு அழைத்துச் செல்லாது. பொருளாசையை விக்கிரக ஆராதனையோடு வேதம் ஒப்பிடுகிறது. தன் ஐசுவரியத்தைக் குறித்தும் களஞ்சியங்களைக் குறித்து மட்டும் கவலைப்பட்ட ஐசுவரியவானை வேதம் மதிகேடன் என்று அழைக்கிறது. ஆகையால் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற காலத்தின் அருமையை அறிந்து,     கர்த்தருக்காகவும்,     அவருடைய சுவிசேஷப் பணிக்காகவும் எதைச் செய்யலாம் என்ற கரிசனையோடு வாழுங்கள். அப்போது கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து மேன்மேலும் பெருகச் செய்வார்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *