சுற்றிலும் அதின் அளவு பதினெண்ணாயிரங்கோலாகும், அந்நாள் முதல் நகரம் யேகோவா ஷம்மா என்னும் பெயர்பெறும்(எசேக். 48:35).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/jThhqKAY1I0
நாம் ஆராதிக்கிற தேவனுக்கு அனேக நாமங்கள் காணப்படுகிறது. ஒவ்வொரு நாமங்களிலும் அவருடைய வல்லமையும், மகத்துவமும், நன்மையும், ஆசீர்வாதங்களும் அடங்கியிருக்கிறது. அப்படிப்பட்ட கர்த்தருடைய நாமங்களில் ஒன்று யேகோவா ஷம்மா என்பதாகும். யூதா ஜனங்களுடைய பாபிலோனிய சிறையிருப்பின் இருபத்தைந்தாவது வருடத்தில் எசேக்கியேல் தீர்க்கதரிசிக்குக் கர்த்தர் இந்த நாமத்தை வெளிப்படுத்தினார். எருசலேம் பட்டணம் மண்மேடும், கர்த்தருடைய ஆலயம் சுட்டெரிக்கப்பட்டதாயும், ஒரு கல்லின் மேல் ஒரு கல் இராதபடி காணப்பட்ட வேளையில், கர்த்தர் எசேக்கியலோடு பேசி, எருசலேம் பட்டணமும், ஆலயமும் திரும்ப எடுத்துக் கட்டப்படும் என்பதாகவும், கர்த்தராகிய நான் அங்கே இருப்பேன் என்றும் வாக்கு கொடுத்தார். கர்த்தருடைய வாக்கின்படியே பாபிலோனிய சிறையிருப்பு முடிந்த எழுபதாவது வருடத்தில் செருபாபேலின் தலைமையின் கீழ் ஒரு கூட்ட ஜனங்கள் கடந்து வந்து ஆலயத்தைக் கட்டி மீண்டும் தேவனைத் தொழுது கொள்ள ஆரம்பித்தார்கள். குறிப்பாக எசேக்கியேல் 40 முதல் 48ம் அதிகாரங்களில் இயேசுவின் ஆயிர வருட அரசாட்சியைப் பற்றி எழுதப்பட்டிருக்கிறது. அப்போதும் இயேசு எருசலேமை மையமாய் வைத்து பூமியை ஆட்சிசெய்வார், அவர் அங்கே ராஜாவாக இருப்பார் என்பதாகவும் காணப்படுகிறது. அப்போது, அங்கு தீங்கு செய்வாருமில்லை, கேடுசெய்வாருமில்லை, சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும் என்று ஏசா. 11:9 கூறுகிறது. அதன்பின்பு, மணவாட்டிக்காக ஆயத்தமாகிக் கொண்டிருக்கிற புதிய எருசலேமிலும் இயேசு நம்மோடு அங்கே காணப்படுவார். நம் நடுவில் அவருடைய வாசஸ்தலம் இருக்கும் என்று வெளி. 21:3 கூறுகிறது. அவ்விதமாகக் கர்த்தர் நம்மோடும், நாம் அவரோடும் என்றென்றுமாய் காணப்படுவோம்.
கர்த்தருடைய பிள்ளைகளே, சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு இம்மானுவேலாய் பூமியில் அவதரித்த இயேசு, ஆவியானவராய் இன்றும் உங்களோடு இருக்கிறார். உலகத்தின் முடிவு பரியந்தமும் அவர் உங்களோடு காணப்படுவார். அவர் உங்களோடு காணப்படும் போது, உங்கள் யேகோவாயீரேயாய் இருந்து, உங்கள் தேவைகளை எல்லாவற்றையும் சந்திப்பார். அவர் உங்களுக்கு அடைக்கலமும் பெலனும் ஆபத்து நாட்களில் மிகச் சமீபத்தில் காணப்படுகிற துணையுமாயிருப்பார். ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை, உன்னை என் உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறேன் என்றவர், உங்களை ஒருநாளும் மறவாமல் என்றும் உங்களோடிருந்து நடத்துவார். மாத்திரமல்ல, நம்முடைய சபைகளிலும் கர்த்தர் இருப்பார். நாம் கூடிவரும்போது அங்கே அவருடைய பிரசன்னத்தை அதிகமாய் உணரும் படிக்குச் செய்வார். இரண்டு மூன்று பேர் ஒருமனப்பட்டு இயேசுவின் நாமத்தில் கூடிவரும் போது உங்கள் நடுவில் இருப்பேன் என்று வாக்குக் கொடுத்தவர் என்றும் நம் நடுவில் காணப்படுவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae