உண்மையிலேயே ஆச்சரியப்படத்தக்கவர்!!!

நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல்வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். ரோமர் 5:8

இன்று அநேகர் தம்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் விரும்புவது என்ன? நான் நேசிக்கப்பட விரும்புகிறேன், என்னை  நேசிப்பபர் மிகவும் ஆச்சரியப்படுகிறவறாக இருக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு, ஆனால் சில நேரங்களில் அவைகள் ஏமாற்றத்தைத்தான் தருகிறதாய் இருக்கிறது. யாராவது ஒருவரால் நாம் நேசிக்கப்பட வேண்டும். கரிசனையுடன் கவனிக்கப்பட்ட வேண்டும், பாதுகாக்கப்பட வேண்டும், என்று தானே நாம் அனைவரும் விரும்புகிறோம்? அந்த ஒருவர் ஆச்சரியப்படத் தக்கவராக இருந்தால் இன்னும் நல்லதல்லவா?

மேற்கூறிய அனைத்து விளக்கங்களுக்கும் உரிய ஒரே ஒரு நபர் உண்டு. அவர்தான் நம் ஆண்டவராகிய “இயேசு கிறிஸ்து”! யாராலும் சொல்லிமுடியாத அளவற்ற அன்பின் எடுத்துக்காட்டாக, பரலோகத்திலுள்ள தமது பிதாவைவிட்டு, இந்த பூவுலகில் சிறு குழைந்தையாக அவர் அவதரித்தார். அதைத்தான் நாம் கிறிஸ்துமஸ் என்று கொண்டாடுகிறோம் ( லூக்கா  2-ம் அதிகாரம்). இவ்வுலகில் பாவமில்லாத பரிபூரணராய் வாழ்ந்து, நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில் மரித்து, தேவனுக்குகந்த கிருபாதாரப்பலியாக தம்மையே அவர் ஒப்புக்கொடுத்தார்       (யோவான் 19:17 -30). நம்முடைய பாவத்தினின்றும், பாவத்தின் சம்பளமாகிய மரணத்தினின்றும் நம்மை மீட்க, நம்முடைய ஸ்தானத்தை அவர் ஏற்றுக்கொண்டார். மேலும் “ நாம் பாவிகளாய் இருக்கையில் கிருஸ்து நமக்காக மரித்தார் “ ( ரோமர் 5:8). மூன்றாம் நாள் தேவன் அவரை  மீண்டும் உயிரோடே எழுப்பி உயர்த்தினார்( மத்தேயு 28:1-8)

நாம் மனந்திரும்பி, இயேசு கிறிஸ்துவின் இந்த ஆசாரியமான , அளவற்ற அன்பை ஏற்றுக்கொள்ளும்பொழுது, அவர் நமது மீட்பராகவும் ( ரோமர்5:9), நமது ஆண்டவராகவும் (யோவான்13:14), போதகராகவும் (மத்தேயு 23:8) மற்றும் சிநேகிதராகவும் ( யோவான் 15:14) ஆகிறார். நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுவதினாலே, பிதாவானவர் நமக்கு பாராட்டுன அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள் ( 1 யோவான் 3:1, யோவான் 1:12). மேலும், யாராவது உங்களை நேசிக்க வேண்டடும் என்ற வாஞ்சையோடு நீங்கள் இருக்கிறீர்களா? யாராலும் நேசிக்கக்கூடாத அளவிற்கு, இயேசு கிறிஸ்து உங்களையும் என்னையும் நேசிக்கிறார். அவர் உண்மையிலேயே ஆச்சரியப்படத்தக்கவர்!

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக . ஆமென்

Bro. David .P
Word of God Church
Doha – Qatar
https://www.wogim.org

Thayin Karuvil Unnai Therinthukondaen, Uthamiyae Vol. 3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *