ஞானமுள்ள சிலந்திப் பூச்சி (Wise Spider)

நீதி 30:24 – 28 பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு. தன் கைகளினால் வலையைப் பின்னி, அரசர் அரமனைகளிலிருக்கிற சிலந்திப் பூச்சியுமே.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/n_p7C3MzxMs

உங்கள் கைகளால் ஒரு சிலந்தி பூச்சியை பிடித்து கொல்லலாம், ஆனால் நீங்கள் அதை ராஜாக்களின் அரண்மனைகளில் காணலாம் என்பதை அகூர் நமக்கு நினைவூட்டுகிறார். சிலந்திப்பூச்சியானது யானை, சிங்கம், முதலை, மாடு போன்ற அளவிற்கு அளவில் பெரிய உயிரினமல்ல. அதின் அளவு சிறியதாகவே இருக்கிறது, ஆனால் அது ராஜாக்களின் அரண்மனையில் இருக்கிறது என்று வசனம் கூறுகிறது. அதன் சிறிய அளவு காரணமாக உங்களால் முடியாத இடத்திற்கு அவைகள் செல்ல முடியும். நம் சொந்த எண்ணங்களில் நாம் சிறியவர்களாக தாழ்மையாக இருந்தால் நாமும் ராஜாவின் அரண்மனையை அடையலாம் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

பெரிய மனிதர்கள் அதாவது தான் பெரிய ஆள் என்ற கர்வமும் அகங்காரமும் கொண்ட ஜனங்கள் ராஜ அரண்மனைக்குள் செல்வது கடினம். யோசேப்பு பார்வோனின் அரண்மனைக்குள் கடந்து சென்றான், மொர்தெகாய் ராஜாவின் அரண்மனைக்குள் கடந்து சென்றான், தானியேல் மற்றும் அவனுடைய நண்பர்கள் ராஜாவின் அரண்மனைக்குள் கடந்துசென்றார்கள். இவர்களெல்லாருக்கும் ஒரு வித்தியாசம் என்னவென்றால், அவர்கள் தாழ்மையிலிருந்து வந்தவர்கள்.

ராஜாவின் அரண்மனைக்குள் கடந்துசெல்வது என்றால் மிகவும் கடினம். ஆனால், நாம் நம் சொந்த எண்ணங்களில் சிறியவர்களாக இருக்கும்போது ராஜாக்களின் அரண்மனைகளுக்குள் நுழைவது எளிதாக இருக்கும். ஆகையால் தேவ பிள்ளைகள் எப்பொழுதும் தாழ்மையின் சிந்தையை அணிந்தவர்களாக காணப்பட வேண்டும்.

பவுல் சொன்னான் நான் பாவிகளிலும் பிரதான பாவி, நான் அப்போஸ்தலர்களிலெல்லாரிலும் சிறியவன் என்றான். உண்மையில் பவுல் மற்ற அப்போஸ்தலர்களை காட்டிலும் சிறியவனா? வேதாகமத்திலேயே அதிகமான புஸ்தகங்களை எழுதியவன், அவன் எழுதிய புதிய ஏற்பாடு புஸ்த்தகங்கள் இன்றும் சபைக்கு ஆதாரமாகவும் பிரயோஜனமுள்ளவைகளாகவும் இருக்கிறது. அவன் இயேசுவின் நாமத்தில் செய்த அற்புதங்கள் ஏராளம், அவன் கடந்து சென்ற மிஷினரி பயணங்கள் மிகவும் முக்கியம் வாய்ந்தவை, அவைகள் மூலம் அவன் கட்டிய சபைகள் ஏராளம். அப்படிப்பட்டவன் அப்போஸ்தர்களில் சிறியவன் என்று அழைக்க எப்படி தன்னால் முடிந்தது? இன்று இரண்டு பாடல்களை போட்டு தான் பெரிய ஆள் என்று காட்டிக்கொள்ளுகிற ஊழியக்காரர்கள் உண்டு. ஒரு கூட்டம் நடத்த ஊழியக்காரர்கள் செய்யும் விளம்பரத்திற்கு அளவே இல்லாமல் போய்விட்டது. ஒவ்வொருநாளும் தாங்கள் நடத்தப்போகும் கூட்டத்திற்கு Count Down Starts என்ற விளம்பரம் தாண்டி, கடைசிநாளில் ஒவ்வொருமணிநேரமும் Count Down Starts போன்ற விளம்பரமும் செய்து தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளவே சில ஊழியர்கள் எழும்பி இருக்கிறார்கள். ஏன் ஊழியர்கள் இப்படிப்பட்ட கவற்சிக்கிற விளம்பரம் செய்ய வேண்டும்? காரணம் தேவ வல்லமையை நம்பாமலும், தங்களை பெரிய ஆளாக அடையாளப்படுத்திக்கொள்ளவே அநேகர் விரும்புகிறார்கள். பவுல் இப்படிப்பட்டவர்களுக்கு முற்றிலும் வித்தியாசமானவன். அவன் எல்லாரிலும் சிறியவன் என்று சொன்னான். ஆகையால் தான் அவன் மூன்றாம் வானம் வரைக்கும் எடுத்துக்கொள்ளப்பட்டு, ராஜாதி ராஜாவின் அரண்மனைக்கு சென்றான். எண்ணங்களில் சிறியவனாக இருந்த பவுலுக்கே இது சாத்தியமாய் இருந்தது.

ஆகையால் சிலந்தி பூச்சியை போல, நாமும் எண்ணங்களில் சிறியவர்களாக அதாவது தாழ்மையாக இருப்போம். அப்பொழுது, இராஜாதி இராஜாவாகிய இயேசுகிறிஸ்துவின் அரண்மனைக்குள் நாம் செல்லுவோம். மகா பரிசுத்த ஸ்தலத்தில் நம்முடைய வாசஸ்தலம் குடியிருப்பு காணப்படும்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *