நொறுக்கும் கல் (Crushing Stone)

மத் 21:44. இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/ZaC-55KVxmE

இயேசு ஒரு கல்லுக்கு அடையாளமாக இந்த வசனத்தில் ஒப்புமைப்படுத்துகிறார். இந்த கல்லின் மேல் கட்டப்படுவதற்கு கர்த்தர் வாய்ப்பையும் கிருபையும் கொடுத்திருக்கிறார். ஆனால் அவரை மறுதலிக்கிறவர்கள், அவருடைய இராஜ்யத்திற்கு விரோதமாக செயல்படும் யாராக இருந்தாலும், நியாயாசனத்திற்கு முன்பாக நிற்கையில், இந்த கல் அவர்களை நொறுக்கும். அவர் உங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாயிருப்பார்; ஆகிலும் இஸ்ரவேலின் இரண்டு கோத்திரத்துக்கும் தடுக்கலின் கல்லும், இடறுதலின் கன்மலையும், எருசலேமின் குடிகளுக்குச் சுருக்கும் கண்ணியுமாயிருப்பார். அவர்களில் அநேகர் இடறிவிழுந்து நொறுங்கிச் சிக்குண்டு பிடிபடுவார்கள் என்று ஏசா 8:14,15 கூறுகிறது.

நேபுகாத்நேச்சார் ராஜ்யபாரம்பண்ணும் இரண்டாம் வருஷத்திலே, நேபுகாத்நேச்சார் சொப்பனங்களைக் கண்டான். அவனுடைய சொப்பனத்தின் அர்த்தத்தை கண்டறிய சாஸ்திரிகளையும் ஜோசியரையும் சூனியக்காரரையும் கல்தேயரையும் அழைக்கச் சொன்னான். அவர்கள் ராஜாவின் முன்பாக வந்துநின்று நீர் கண்ட சொப்பனத்தை சொல்லும்; அப்பொழுது அதன் அர்த்தத்தை சொல்லுவோம் என்றார்கள். அதற்கு ராஜா, நான் கண்ட சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் நீங்கள் சொல்லாவிட்டால், இங்கே இருக்கும் எல்லாரும் கொலைசெய்யப்படுவீர்கள் என்று சொன்னான். அதற்கு அவர்கள், மாம்சமாயிருக்கிறவர்களோடே வாசம்பண்ணாத தேவர்களேயொழிய ராஜசமுகத்தில் அதை அறிவிக்கத்தக்கவர் ஒருவரும் இல்லை என்றார்கள். இதினிமித்தம் ராஜா மகா கோபமும் உக்கிரமுங்கொண்டு, பாபிலோனில் இருக்கிற எல்லா ஞானிகளையும் கொலைசெய்யும்படி கட்டளையிட்டான். அப்பொழுது, தானியேல் ராஜாவினிடத்தில்போய், சொப்பனத்தின் அர்த்தத்தை ராஜாவுக்குக் காண்பிக்கும்படித் தனக்குத் தவணைகொடுக்க விண்ணப்பம்பண்ணினான். ஆண்டவர் தானியேலுக்கு ராஜா கண்ட சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் காண்பித்தார். அதின்படி தானியேல் அந்த சொப்பனத்தின் அர்த்தத்தையும் இனி சம்பவிக்கவேண்டியவைகளை குறித்தும் சொன்னான்.

ராஜாவின் சொப்பனத்தில் பெரிய சிலை மிகுந்த பிரகாசமுள்ளதாகவும்; அது ராஜாவுக்கு எதிரே நிற்கிறதாயும்; அதின் ரூபம் பயங்கரமாயம் இருப்பதை கண்டான். அப்பொழுது அவன் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் பெயர்ந்து உருண்டுவந்தது; அது அந்தச் சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதின் பாதங்களில் மோதி, அவைகளை நொறுக்கிப்போட்டது என்று வசனம் கூறுகிறது. ஒரு கல் வந்து இராஜ்யங்களை, கர்த்தருக்கு விரோதமான பெரிய இராஜ்யங்களை நொறுக்கிவிட்டது.

அதுபோலத்தான், கர்த்தருடைய பிள்ளைகளுக்கு விரோதமாக, அவருடைய ஊழியர்களுக்கு விரோதமாக செயல்படுகிறவர்களும், சாத்தானின் கூட்டத்தாரும், நொறுக்கப்படுவார்கள். ஒரு கல் வந்து அவர்களை நொறுக்கும். காரணம் மகிமையின் நம்பிக்கையாக இயேசு உங்களுக்குள் வாசம் செய்வதால், உங்களுக்கு விரோதமாக செயல்படுகிறவர்கள், கல்லாகிய இயேசுவுக்கே விரோதமாக செயல்படுகிறார்கள். மோசேயிடம் ஆண்டவர் சொன்னார் இந்த ஜனங்கள் உன்னை நிராகரிக்கவில்லை; என்னை நிராகரித்தார்கள் என்பதாக. உங்களை நிராகரிப்பவர்கள், சர்வ வல்லமைபடைத்த இயேசுவை நிராகரிக்கிரார்கள். உங்களை தொடுகிறவன் என் கண்ணின் மணியை தொடுகிறான் என்றும் கர்த்தர் சொல்லுகிறார். உங்களுக்கு விரோதமாக கிரியை செய்யும், எந்தவொரு மனுஷீக ஆவிகளும், குறிசொல்லுகிற ஆவிகளும், சோர்வை உண்டுபண்ணும் ஆவிகளும், இச்சைகளை விதைக்கும் ஆவிகளும், இயேசுவாகிய கல்லால் நொறுக்கப்படும். உங்களுக்கு விரோதமாக உருவாக்கப்படும் எந்தவொரு ஆயுதமும் வாய்க்காதேபோகும். உங்களுக்கு விரோதமாக நியாயாசனத்தில் எழும்பும் எந்தவொரு நாவையும் நீங்கள் குற்றப்படுத்துவீர்கள். இது ஊழியம் செய்யும் உங்களுக்கே சொந்தமானது, சுதந்திரமானது.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *