நேரம் (Time)

நீதிமொழிகள் 6:9 சோம்பேறியே, நீ எவ்வளவுநேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்?

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/WqwH9fBWZLg

நேரத்தின் அருமை என்ன என்பதை ஓட்டப்பந்தய வீரரான உசைன் போல்டிடம் (Usain Bolt) கேளுங்கள் என்று சொல்லுவார்கள். உசைன் போல்ட் சுமார் எட்டு முறை ஒலிம்பிக் ஓட்டப்பந்தய போட்டியில் தங்க பதக்கங்களை வென்றவர். 100m ,200m ,400m , ஓட்டப்பந்தயத்தில் மின்னல் வேகத்தில் ஓடி பதக்கங்களை குவித்தவர். 100m ஓட்ட பந்தயத்தை சுமார் 9 செகண்ட்ஸில் ஓடி பதக்கத்தை வென்றவர். அவர் ஓடியது வெறும் 9 sec தான் என்றாலும், அவர் நேரத்தை சரியாக பயன்படுத்தி வென்றதன் நிமித்தம் அவர் பெற்றுக்கொண்ட பரிசு சுமார் 100 மில்லியன் USD. வெறும் 9 secஐ சரியாக பயன்படுத்தின இந்த உலக ஓட்டத்திற்கே இவ்வளவு பெரிய பரிசுத்தொகை என்றால், ஆவிக்குரிய ஓட்டத்தில் நேரத்தை வீணாக செலவழிக்காமல் ஓடுபவர்களுக்கு பரலோகம் கொடுக்கும் பரிசு எவ்வளவாய் இருக்கும் என்று யோசித்துப்பாருங்கள்.

காலம் பொன் போன்றது, கடமை கண் போன்றது என்று தமிழில் பழமொழியுண்டு. நம்முடைய வாழ்நாட்களில் கர்த்தர் கொடுக்கும் ஒவ்வொரு வினாடியும் மிகவும் முக்கியம். இந்த நேரத்தை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் பணத்தை இழந்தாலோ, வீட்டை இழந்தாலோ, சுகத்தை இழந்தாலோ மீண்டும் இழந்ததை பெற்றுக்கொள்ளுவோம். ஆனால் தேவனுக்காகவும் தேவனோடு செலவிடும் நேரத்தையும் விட்டுவிட்டால் திரும்ப அதை பெற்றுக்கொள்ளுவது இயலாத காரியம்.

இந்நாட்களில் தொலைபேசியில் மணிக்கணக்கில் பேசி நேரத்தை வீணடைத்துவிடுகிறோம். WhatsApp பல விசுவாசிகளின் நேரத்தை சீரழித்துவிட்டது. சமூக வலைத்தளங்களில் வரும் Reels சத்துரு விரித்த மாய வலை என்பதை புரிந்துகொள்ளாத கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை இலட்சக்கணக்கில் இருக்கிறது. மணிக்கணக்காக Reels மற்றும் Short vidoesஐ பார்த்து வாழ்நாளில் சில மணிநேரங்களையல்ல, வருஷங்களை இழந்துவிட்டோம் என்பதை அறிந்துகொள்ளுங்கள். மாத்திரமல்ல, தூங்கி தூங்கி நேரத்தை வீணாக்குகிற விசுவாசிகளின் எண்ணிக்கையும் கடற்கரை மணலை போல காணப்படுகிறது. பலர் காலையில் அவசர அவசரமாக எழும்பி வேலைக்கு செல்வதே பழக்கமாகிவிட்டது. விடுமுறை என்றால் காலை பத்து மணிக்கு மேலாக தான் எழும்புவார்கள். அதிக நேரம் தூக்கம் சோம்பலை கொண்டுவரும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். ஐத்திகு என்பவன் பவுல் பிரசங்கிக்கும்போது தூக்கமடைந்து மெத்தையிலிருந்து கீழே விழுந்தான். இராத்திரி தூக்கத்திலே ஒரு ஸ்திரீ தன் பிள்ளையின்மேல் புரண்டுபடுத்ததினால் அது செத்துப்போயிற்று. அவ்வளவு தூரம் தூக்கத்தின் மேல் அந்த ஸ்த்ரீக்கு பிரியம்.

தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்; கண் விழித்திரு, அப்பொழுது ஆகாரத்தினால் திருப்தியாவாய் என்று நீதி 20 :13 கூறுகிறது. தூக்கம் கந்தைகளை உடுத்துவிக்கும் என்று நீதி 23 :21 கூறுகிறது. தரித்திரம், கந்தை போன்ற சாபங்களை கொண்டுவரும் தூக்கத்தை விரும்பாமல், குறித்த ஜாமத்தில் எழுந்து கர்த்தரோடு உங்கள் நேரத்தை செலவிடுங்கள். காலத்தை பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். நாட்களை எண்ணும் அறிவை ஆண்டவரிடம் கேளுங்கள். நேரத்தை சரியாக பயன்படுத்தினால் உங்களுக்கு கிடைக்கும் பரிசுத்தொகையும் பெரியதாய் இருக்கும் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *