மத்தேயு 20 : 15. என்னுடையதை என் இஷ்டப்படிச் செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா என்றான்.
மத்தேயு 20 : 1 – 16 வரை வாசிக்கும்போது ஒரு சம்பவத்தின் மூலம் இயேசு பரலோக ராஜ்யத்தை குறித்து சொன்னார்.
வீட்டெஜமான் ஒருவன் தன்னுடைய தோட்டத்தில் வேலை செய்யும்படி வேலையாட்களை அதிகாலையில் பணியில் அமர்த்தினார். இப்படியாக அவர் உதாரணத்திற்கு சிலரை அதிகாலையிலிருந்தும், சிலரை உதாரணமாக ஒன்பது மணியிலிருந்தும், சிலரை பன்னிரண்டு மணியிலிருந்தும், சிலரை மூன்று மணியிலிருந்தும் தன்னுடைய தோட்டத்தில் வேலை செய்யும்படி வேலையை கொடுத்தார்.
வேலை முடிந்ததும், தன்னுடைய காரியக்காரனை நோக்கி நீ இவர்களெல்லாருக்கும் வேலைபார்த்ததற்கு கூலி கொடு என்று கடைசியில் வந்தவர்கள் முதல், அதாவது மாலை மூன்று மணிக்கு வேலைக்கு வந்தவர்கள் தொடங்கி அதிகாலையிலிருந்து வேலை செய்தவர்கள் வரை வரிசையாக நிண்டுகொண்டிருந்தார்கள். கடைசியில் வந்தவனுக்கு உதாரணத்திற்கு நூறு ரூபாய் கொடுக்கப்பட்டது. இதை பார்த்த மற்றவர்கள், நாம் அதிகாலையிலிருந்து வெயில், உஷ்ணம் என்று பாராமல் உழைத்தோம், ஆகையால் நமக்கு எஜமானிடமிருந்து இவர்களை காட்டிலும் அதிகமாக கிடைக்கும் என்று எண்ணி கொண்டிருந்தார்கள். ஆனால் எஜமான் அவர்களுக்கும் நூறு ரூபாய் தான் கொடுத்தார். இதனால் அவர்கள் முறுமுறுத்தார்கள்; மற்ற வேலைக்காரர்கள் மேல் பொறாமை கொண்டார்கள்; வன்கண் உடையவர்களாயிருந்தார்கள். அப்பொழுது தான் எஜமான் சொல்கிறார் என்னுடையதை என் இஷ்டப்படிச் செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா என்றான்.
நீங்கள் உங்கள் வேலை ஸ்தலங்களில் இப்படிப்பட்ட சூழ்நிலையில் செல்லலாம். உங்களுக்கு பிந்தி வந்தவர்கள், உங்களை விட அனுபவம் குறைந்தவர்கள், உங்களை விட வயதில் குறைந்தவர்கள், உங்களை விட திறமை குறைந்தவர்கள், உங்களுக்கு அடுத்ததாக பணியில் அமர்த்தப்பட்டவர்களென்று யாரவது இருக்கலாம். அவர்களும் நீங்கள் வாங்குகிற கூலியையோ அல்லது உங்களை காட்டிலும் மேலாகவோ வாங்கலாம். அவர்களை பார்த்து வன்கண்ணனாயிருக்க வேண்டாம்.
மாறாக, கர்த்தர் உங்களை ஏற்ற சமயத்தில் உயர்த்தும்படி அவருடைய பலத்த கரத்திற்குள் அடங்கியிருங்கள்.
கர்த்தர் தாமே உங்களோடு கூட இருபராக. ஆமென்.
Robert Jegadheesh.R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org