I சாமுவேல் 26 : 24 …… அப்படியே என் ஜீவனும் கர்த்தரின் பார்வைக்கு அருமையாயிருப்பதினால், அவர் என்னை எல்லா உபத்திரவத்திற்கும் நீங்கலாக்கி விடுவாராக என்றான்.
சவுல் தாவீதை தொடர்ந்து அவனை கொன்று போடும்படியாக துரத்தினான். சில வேளைகளில் தாவீதை சுவரோடே கொன்று போடும்படியாக ஈட்டியை சவுல் எரிவான். அவைகளில் இருந்து தாவீது தன்னை தப்புவித்து கொள்ளுவான். சவுல் அநுதினமும் அவனைத் தேடியும், தேவன் அவனை அவன் கையில் ஒப்புக்கொடுக்கவில்லை (1 சாமு 23 : 14 ).
தாவீது என்கேதியின் வனாந்தரத்தில் இருக்கிறான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது சவுல் மூவாயிரம் பேரை கூட்டிக்கொண்டு தாவீதை கொன்று போடும்படியாக போனான். ஆனால் நடந்தது சவுலை தாவீது கொன்றுபோடும் படியான சந்தர்ப்பம் வந்தபோதும் தாவீது சவுலின் சால்வைத் தொங்கலை மாத்திரம் அறுத்துக்கொண்டு போனான்.
பின்னும் ஒருமுறை சவுல் சீப்வனாந்தரத்திலே தாவீதைத் தேடும்படி எழுந்து, இஸ்ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம் பேரோடுங் கூட, சீப் வனாந்தரத்திற்குப் புறப்பட்டுப்போனான். அப்பொழுதும் சவுல் தாவீதை கொன்று போடும்படியாக போனான். ஆனால் மாறாக தாவீது சவுலை கொன்று போடும் படியாக சந்தர்ப்பம் நேர்ந்தது. தாவீது சவுலின் தலைமாட்டில் இருந்த ஈட்டியையும், தண்ணீர்ச் செம்பையும் எடுத்துக்கொண்டபின்பு புறப்பட்டு போனான்.
இப்படி அநேக முறை தாவீதை கர்த்தர் சவுலின் கைக்கு தப்புவித்தார். ஆகையால் தான் தாவீது சொல்கிறார் என் ஜீவன் கர்த்தருடைய பார்வைக்கு அருமையானது என்று. கர்த்தரே தாவீதுக்கு வந்த எல்லா உபதரவத்திற்கும் நீங்கலாக்கி விடுவித்தார்.
உங்களுடைய ஜீவனும் கர்த்தரின் பார்வைக்கு அருமையானது. சத்துரு பல சந்தர்ப்பங்களில் உங்களை தாக்கிவிட வேண்டுமென்று கோரோனோ வைரஸ் போன்ற அம்புகளை எய்யலாம். அவன் எப்படிப்பட்ட அம்புகளை எய்தாலும் கர்த்தருடைய பார்வையில் உங்களுடைய ஜீவன் அருமையானது. அவர் உங்களை இந்த கொள்ளை நோய்களிலிருந்து விடுவிப்பார்.
சத்துரு வெள்ளம் போல எழும்பிவரலாம். வெள்ளம்போல வைரஸ்களை அனுப்பலாம்; வெள்ளம்போல நோய்களை அனுப்பலாம்; வெள்ளம்போல COVID19 வரலாம். அவன் வெள்ளம்போல திரள் திரளாக இப்படிப்பட்ட வைரஸ் போன்ற அம்புகளை எய்தாலும், உங்களுக்காக கொடியேற்றுகிறவர் ஒருவர் உண்டு. அவர் உங்கள் பரிசுத்த ஆவியானவர். அவர் இப்படிப்பட்ட எல்லா உபாத்திரவங்களிலும் உங்களை விடுதலையாக்கி கொடியேற்றுவார். காரணம் உங்கள் ஜீவன் அவருடைய பார்வைக்கு அருமையானது.
கர்த்தர் தாமே உங்களோடு கூட இருப்பராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org