என்னை நோக்கிக் கூப்பிடு:-

சங்கீதம் 50:15 ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.

சங்கீதக்காரன் சொல்லுகிறான் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார்.

எலியா கர்த்தருடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டான். வானத்திலிருந்து அக்கினி இறங்கி வந்தது.

ஏசாயா தீர்க்கதரிசி கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில், சூரிய கடிகாரம் பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்பும்படி செய்தார்.

கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து அவரை நோக்கி கூப்பிட்டாள். பிசாசினால் பிடிபட்ட தன்னுடைய மகளுக்கு அற்புதம் நடக்கவேண்டுமென்று. கர்த்தர் அற்புதம் செய்தார்.

இரண்டு குருடர்கள் ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இறங்கும் என்று கூப்பிட்டார்கள். கர்த்தர் அவர்கள் கண்களை தொட்ட உடனே அவர்கள் பார்வை அடைந்தார்கள்.

இஸ்ரவேல் ஜனங்கள் தங்களை ஆளுகை செய்யும்படியாக ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டுமென்று சாமுவேலை கேட்டுக்கொண்டார்கள். இது சாமுவேலுக்கு தகாததாய் இருந்தபடியால், சாமுவேல் 8 : 6 ன் கடைசியில் சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான். சாமுவேல் 8 : 7 ன் ஆரம்பத்தில் கர்த்தர் சாமுவேலை நோக்கி பேச ஆரம்பித்தார்.

சாமுவேல் இஸ்ரவேல் ஜனங்களுக்காக கர்த்தரை நோக்கி வேண்டிக்கொண்டான்; கர்த்தர் அவனுக்கு மறுமொழி அருளிச்செய்தார் ( சாமு 7 : 9 ). சாமுவேல் அவனுக்காக கர்த்தரை நோக்கி வேண்டிக்கொள்வதை பார்க்கிலும், இஸ்ரவேல் ஜனத்திற்காக வேண்டிக்கொண்டான். நாம் வாழ்கிற தேசங்களுக்காக கர்த்தரை நோக்கி வேண்டிக்கொள்ள வேண்டும். நாம் வாழ்கிற தேசம் ஆபத்தை சந்திக்கும் நேரத்தில் கர்த்தர் அவரை நோக்கி வேண்டிக்கொள்ளும் ஜனத்தை பார்த்துக்கொண்டிருக்கிறார்.

உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார் (ஏசாயா 30:19 ) என்ற வசனத்தின்படி, உங்களுக்கு வருகிற ஆபத்து காலத்தில் கர்த்தரை நோக்கி கூப்பிடுங்கள். அவர் உங்களை விடுவிப்பார்.

கர்த்தர் தாமே உங்களோடு கூட இருப்பராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *