சகலமும் நன்மைக்கு ஏதுவாக.

வேதம் சொல்கிறது “அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்”..(Rom.8:28)

ஒருவேளை காரியங்கள் தீமையாக தெரிந்தாலும், தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு,அது நன்மைக்கு ஏதுவாக நடக்கிறது. வேதம் சொல்கிறது தேவன் ஒருவரே ஞானமுள்ளவர் (Jude 25).

வனாந்திரத்தில் இஸ்ரயேல் ஜனங்கள் தேவனுக்கு விரோதமாக முறுமுறுத்தார்கள். மோசேயால் ஜனங்களை சரிசெய்ய முடியவில்லை. ஆரோனாலும் மற்ற மூப்பர்களாலும் ஜனங்களை மாற்ற முடியவில்லை.
தேவன் வனாந்திரத்தில் சர்ப்பங்களை அனுப்பினார் . சர்ப்பங்கள் கடித்த போதோ ஜனங்கள் தங்கள் தவறை உணர்ந்து தேவனிடம் திரும்பினார்கள் (Num. 21). சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்துவிற்கு முன்னடையாளமாக வெண்கல சர்ப்பத்தை நோக்கி பார்த்து பிழைத்தார்கள்.

இன்றைய நாட்களிலும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பாதிப்பை உண்டாக்கினாலும் கர்த்தர் ராஜரீகம் பண்ணுகிறார். அவர் எல்லாவற்றையும் நன்மையாக மாறப்பண்ணுவார்.

ஒரு தேவ மனிதர் சொன்னார் ‘வேதத்தை கற்று கொள்ள சிறந்த கல்லூரி உபத்திரவமே’ (School of Suffering). சங்கீதக்காரனின் அறிக்கை “நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன்.(Ps. 119:67). மேலும் “நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்” (Ps 119:67) என்றும் அறிக்கையிடுகிறார்.
தேவன் எல்லாவற்றையும் நன்மையாக மாறப்பண்ணுவராக!

During an earthquake it sometimes happens that fresh springs break out in dry places which water quicken the land so that plants can grow. In the same way the shattering experiences of suffering can cause the living water to well up in a human heart – Sadhu Sundar Singh.

B.Thivakar
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *