உராய்ஞ்சுகிற ஒரு பட்சியைக்கிழக்கிலிருந்தும், என் ஆலோசனையை நிறைவேற்றும் மனுஷனைத் தூரதேசத்திலிருந்தும் வரவழைக்கிறவராயிருக்கிறேன், அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன், அதைத் திட்டம் பண்ணினேன், அதைச் செய்து முடிப்பேன்(ஏசாயா 46:11).
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/bLYRjnWvM8E
ஆண்டவர், அவருடைய திட்டங்களை நிறைவேற்றுகிற ஜனங்களை எல்லாக் காலகட்டங்களிலும் வைத்திருக்கிறார். எகப்தியர்களுடைய கைகளிலிருந்து இஸ்ரவேல் ஜனங்களை விடுவிக்க மோசேயை எழும்பினார், கானானை யுத்தம் செய்து சுதந்தரித்துப் பங்கிடுவதற்கு யோசுவாவை தெரிந்துகொண்டார், இருநினைவுகளினால் குந்திக்குந்தி நடந்த ஜனங்களைக் கர்த்தரே தேவன் என்பதை நிரூபித்து அவரண்டை திருப்புவதற்கு எலியாவைத் தெரிந்துகொண்டார். இவர்கள் எல்லாரும் எபிரேயர்களாய் காணப்பட்டார்கள். ஆனால் தன் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு பெர்சியாவை சேர்ந்த புறஜாதி ராஜாவாகிய கோரேசைக் கூட தெரிந்தெடுத்தார் என்பது கவனிக்கப்பட வேண்டியதாய் காணப்படுகிறது.
உராய்ஞ்சுகிற பட்சி என்றும், என் ஆலோசனையை நிறைவேற்றும் மனுஷன் என்றும் மேற்குறிப்பிட்ட வசனத்தில் குறிப்பிடப்ட்டவர் கோரேஸ் ராஜாவாகக் காணப்படுகிறார். உராய்ஞ்சுகிற பட்சி என்பது பருந்து அல்லது கழுகு போன்ற வேகமானதும் சக்திவாய்ந்ததுமான பறவையைக் குறிக்கிறது. இவைகள் கூர்மையான பார்வை கொண்டவைகள் மற்றும் வேட்டையாடுவதிலும் பறப்பதிலும் அதிகத் திறன் பெற்றவையாய் காணப்படுகிறது. அதுபோல கர்த்தருடைய ஆலோசனையை நிறைவேற்றுகிறவனாகவும் அவன் காணப்பட்டான். அவன் பிறப்பதற்குச் சுமார் 200 வருடங்களுக்கு முன்பாகவே, பாபிலோனில் 70 வருடங்கள் அடிமைகளாய் காணப்படப் போகிற தன் ஜனங்களை விடுவித்து மீண்டும் எருசலேம் ஆலயத்தைத் திரும்ப எடுத்துக் கட்டுவதற்கு அவர்களை அனுப்பி தேவனுடைய திட்டத்தை நிறைவேற்றுவதற்குத் தெரிந்துகொள்ளப்பட்டான். அவனைத் தூர தேசமாகிய பெர்சிய தேசத்திலிருந்து தன் திட்டத்தை நிறைவேற்றக் கர்த்தர் தெரிந்துகொண்டார். அவன் ஆட்சியில் வந்தவுடன் உராய்ஞ்சுகிற பட்சியைப் போல, துரிதமாகவும் வேகமாகவும் செயல்பட்டு, எருசலேமிலே தேவனுக்கு ஆலயத்தைக் கட்டுவிக்கும்படி தேவன் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். ஆகையால் அவருடைய ஜனங்கள் எல்லாரிலும் எவன் உங்களுக்குள் வாஞ்சையாய் இருக்கிறானோ அவன் போகட்டும், அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனோடிருப்பாராக என்று கட்டளையிட்டு தேவதிட்டத்தை செயல்படுத்தினான்.
கர்த்தருடைய பிள்ளைகளே, கர்த்தர் உங்கள் ஒவ்வொருவரையும் குறித்து ஒரு நோக்கத்தையும் திட்டத்தையும் வைத்திருக்கிறார். நீங்கள் பிறப்பதற்கு முன்பாகவே, உங்கள் மூலம் அவர் நிறைவேற்றப் போகிற பல திட்டங்களை முன் குறித்திருக்கிறார். உங்களை உயர்ந்த நிலையில் வைத்து அழகுபார்க்க விரும்புகிறார். நீங்கள் அதை புரிந்துகொண்டு, உராய்ஞ்சுகி பட்சியைப் போல வேகமாகவும், கூர்மையான தொலைநோக்குப் பார்வையோடும் செயல்பட வேண்டும் என்றும் கர்த்தர் எதிர்பார்க்கிறார். ஆண்டவர் தன்னுடைய திட்டங்களை உங்கள் மூலம் நிறைவேற்றுவதற்கு, உங்களை முழுவதுமாய் அர்ப்பணித்துச் செயல்படுங்கள். அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன், அதைத் திட்டம் பண்ணினேன், அதைச் செய்து முடிப்பேன் என்றும் கர்த்தர் வாக்குக் கொடுக்கிறார். நீங்கள் தலைமைத்துவப் பொறுப்புகளிலும், அனேகருக்கு வழிகாட்டிகளாகவும் காணப்பட விரும்புங்கள், அப்போது கர்த்தர் உங்களை அவ்வண்ணமாகவே உயர்த்தி மேன்மைப்படுத்துவார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Pastor. David
Word of God Church
Mobile +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

