I சாமுவேல் 14:52 சவுல் இருந்த நாளெல்லாம் பெலிஸ்தரின் மேல் கடினமான யுத்தம் நடந்தது; சவுல் ஒரு பராக்கிரமசாலியையாகிலும் ஒரு பலசாலியையாகிலும் காணும்போது, அவர்கள் எல்லாரையும் தன்னிடமாகச் சேர்த்துக்கொள்ளுவான்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/gw1X7eKBbfg
சவுல் இஸ்ரவேல் தேசத்திற்கு முதல் இராஜாவாக இருந்தான். சவுல் மிகவும் உயரமானவன், அவனுடைய இராணுவத்தில் இருப்பவர்கள் எல்லாரும் அவனுடைய தோலின் கீழாக தான் இருப்பார்கள். இப்படிப்பட்ட சவுல் பராக்கிரமசாலியையாகிலும் பலசாலியையாகிலும் காணும்போது தன்னோடு சேர்த்துக்கொள்ளுகிற இராஜ தந்திரத்தை உடையவனாய் காணப்பட்டான். இந்நாட்களில் வேலை ஸ்தலங்களானாலும், விளையாட்டானாலும், அரசியலாக இருந்தாலும் தன்னுடைய அணியில், குழுவில் திறமையானவர்களை மாத்திரமே தலைவர்கள் சேர்த்துக்கொள்ளுவார்கள். அதுபோல தான் சவுல் இரண்டு முக்கியமான தகுதி வாய்ந்தவர்களை தன்னுடைய இராணுவத்தில் தன்னிடமாக சேர்த்துக்கொள்ளுவான்.
அதில் ஒன்றாகிய பராக்கிரமசாலியான மனிதர்கள் யாரை கண்டாலும் தன்னோடு வைத்துக்கொள்ளுவான். உடல் தகுதி உள்ளவர்கள் தான் பராக்கிரமசாலி. அப்படிப்பட்ட உடல் ரீதியாக கட்டுக்கோப்பாக இருக்கிறவர்களை சவுல் சேர்த்துக்கொண்டான். சவுல் பராக்கிரமசாலிகளை சேர்த்துக்கொள்ளுகிறான், ஆனால் தெபொராள் பராக்கிரமசாலிகள் மேல் கர்த்தர் எனக்கு ஆளுகை தந்தார் என்று சொல்லுகிறாள். சவுல் மனிதர்களை நம்பினான். தெபொராள் கர்த்தரை நம்பினாள்.
இரண்டாவது, பலசாலியான மனிதர்களை பார்த்தாலும் தன்னோடு சவுல் சேர்த்துக்கொள்ளுவான். அதாவது மனதளவில் பயமில்லாமல், தைரியமாக இருக்கும் நபர்களை சவுல் தன்னோடு இருக்கும்படியாக சேர்த்துக்கொள்ளுவான். சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை எரிகிற அக்கினிச்சூளையிலே போடுவதற்கு அவர்களைக் கட்டும்படி, தன் இராணுவத்தில் பலசாலிகளாகிய புருஷருக்கு இராஜா கட்டளையிட்டான் என்று வேதம் கூறுகிறது. ஆனால் பலசாலியான மனிதர்கள் எரிகிற அக்கினி சூளைக்கு இறையானார்கள்.
ஆகையால் தான் கர்த்தர் சொன்னார், அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் (சகரியா 4:6) என்பதாக. கர்த்தர் மேல் அதிக நம்பிக்கையில்லாமல் பராக்கிரமசாலிகள், பலசாலிகள் மேல் சவுல் நம்பிக்கை வைத்ததால் தான் அவனுடைய சேனையிலிருந்த ஒருவரும் கோலியாத்தை வீழ்த்த முன் வரவில்லை. நாம் மனித புயத்தில் சார்ந்திருக்கும்படி அழைக்கப்பட்ட ஜனங்கள் அல்ல. மனிதர்களை நம்புவதை பார்க்கிலும் கர்த்தர் பேரில் பற்றுதலாய் இருப்பதே நலம். மனிதர்களை நம்புவது விருதா. பிரபுக்களையும், இரட்சிக்கத்திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள். மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார். நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதைவிட்டுவிடுங்கள்; எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம். பலமும் அல்ல, பராக்கிரமம் அல்ல, கர்த்தருடைய ஆவியினாலையே உங்கள் காரியங்கள் வாய்க்கும். ஆவியானவரை அதிகமாக சார்ந்து நில்லுங்கள். அப்பொழுது கர்த்தர் உங்களுக்கு எல்லா காரியத்திலும் ஜெயத்தை கொடுப்பார்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
www.wogim.org
Doha, Qatar