நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்:-

மத்தேயு 5 : 10. நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.

கிறிஸ்டினா என்ற ஒரு ஊழியக்காரி தன்னுடைய 50 வருட ஊழியத்தின் பாதையில் தீராத வியாதியினால் தாக்கப்பட்டிருந்தார். அவர் சொன்னார் எனக்கு நேரிட்ட இந்த வியாதியினிமித்தம் ஒருபோதும் நான் யேசுவிடம் ஏன் எனக்கு இந்த துன்பத்தை அனுமதித்தீர் என்று கேட்டதேயில்லை என்று.

1949ம் வருடங்களில் சீன தேசத்தில் மொத்தம் சுமார் 700,000 கிருஸ்தவர்கள் இருந்தார்கள். அப்போதைக்கு இருந்த அரசாங்கம் , கிறிஸ்தவர்களை மிகவும் துன்பப்படுத்தியது; அவர்கள் யாவரையும் நாட்டை விட்டு வெளியேறுமாறு கட்டாய சட்டம் இயற்றப்பட்டது. சபை மிகுந்த உபத்திரவங்கள் நடுவே போனது. அப்பொழுது இருந்த அந்த கிருஸ்தவர்கள் அந்த உபத்திரவத்தை சகித்ததினால் தான் இன்றைக்கு சீனாவில் சுமார் 50 மில்லியன்க்கு அதிகமான கிருஸ்தவர்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட உபத்திரவத்தை சகிக்கும்படி கர்த்தர் நம்மை அழைக்கிறார்.கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கு உபத்திரவம் உண்டு என்றே ஆண்டவர் சொன்னார். அதே வேளையில் எல்லா உபத்திரவங்களிலும் இயேசு நம்மோடு இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. இயேசு சொன்னார் அவர்கள் உங்களை ஜெபஆலயங்களுக்குப் புறம்பாக்குவார்கள்; மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும் ( யோவா 16 : 2 ) என்பதாக. மட்டுமல்ல ஆவியானவர் இப்படியாக எழுதி வைத்திருக்கிறார் சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள். ஆகையால் உபத்திரவத்தை பார்த்து சோர்ந்துவிட வேண்டாம்.

எவ்வெளவுக்கெவ்வளவு நீதியினிமித்தம் துன்பத்தை, உபத்திரவத்தை அனுபவித்து மரணத்தின் விளிம்பில் இருக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு யுகா யுகமாக கிருஸ்துவினோடு கூட வாழ ஆயத்தமாகிவிட்டோம் என்று அர்த்தம். ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன் (ரோம 8 : 18 ) என்று பவுல் சொல்கிறதே பார்க்கலாம். மாத்திரமல்ல பிலிப்பு சபைக்கு பவுல் எழுதும்போது சகோதரரே, எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்றென்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன் ( பிலி 1 : 12 ) என்று சொல்வதின் மூலம் ஒவ்வொரு உபத்திரவத்திலும் சந்தோசம் மகிழ்ச்சி காணப்படும் என்பதை பார்க்கமுடிகிறது.

சரீர பிரகாரமாக வரும் இன்னல்கள் மாத்திரம் தான் துன்பமா, உபத்திரவமா? நீதியாய் வேலை செய்ததினிமித்தம், வேலை பறிபோகலாம்; வாலிப பெண் தன்னுடைய தோழிகளோடு கூட உல்லாசமாய் உலகத்துக்குரிய காரியங்களை அனுபவிக்க வேண்டாம் என்று சொல்லும்போது வரும் நிந்தனை; வாலிப மகன் தன்னுடைய தோழர்களோடு கூட மதுஅருந்துவதை தவிர்க்கும்போது வரும் நிந்தை போன்ற உபத்திரவங்களை வரலாம். அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள் ( 2 தீமோ 3 : 12 ) என்றே பவுல் தீமோத்தேயுக்கு எழுதும்போது சொல்கிறார்.

இப்படிப்பட்டதான உபத்திரவங்களை கர்த்தருடைய பிள்ளைகள் தாண்டி வர வேண்டும். அப்படி வருபவர்களை தான் கர்த்தர் பாக்கியவான்களாக பார்க்கிறார். மாத்திரமல்ல அப்படிப்பட்டதான நீங்கள் தான் பரலோகராஜ்யத்தை சுதந்தரித்துக்கொள்ளப்போகிறீர்கள்.

2 கொ- 7 : 4 …. எங்களுக்கு உண்டான சகல உபத்திரவத்திலேயும் பரிபூரண சந்தோஷமாயிருக்கிறேன் என்ற வார்த்தையின் படி எல்லா உபாத்திரவதையும் கிருஸ்து யேசுவுக்குள் சந்தோசமாய் ஏற்றுக்கொள்ளுங்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *