கர்த்தருக்கு முன்பாக முழங்காற்படியிடுங்கள்.

நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்கால்படியிடக்கடவோம் வாருங்கள். சங்கீதம் 95:6

கர்த்தருக்கு முன்பாக நாம் பனிந்து குனிந்து முழங்காற்படியிடுவது அவசியமாய் இருக்கிறது. முழங்கால் ஜெபத்திற்கு ஒரு வல்லமையுண்டு. முகம் சாதிக்காததை முழங்கால் சாதிக்கும், அநேக பரிசுத்தவான்களின் முழங்கால் ஜெபம் உலகத்தை அசைத்திருக்கிறது, அநேகர் சாதித்தித்தும் இருக்கிறார்கள். நீங்கள் உலகத்தை அசைக்க வேண்டுமென்றால் கர்த்தருக்கு முன்பாக முழங்கால் படியிடுங்கள். நீ முழங்காலை முடக்கினால் தேசத்திலே ஒரு அசைவு உண்டாகும், நீ முழங்காலை முடக்கினால் தேசத்திலே ஒரு எழுப்புதல் வரும், நீ முழங்காலை முடக்கினால் தேசத்திலே ஒரு மாற்றம் உண்டாகும்.

தரியு இராஜாவின் நாட்களிலே தானியேலின் முழங்கால் ஜெபம் தேசத்திலே ஒரு மாற்றத்தை கொண்டுவந்தது. தானியேலுக்குள் விசேஷித்த ஆவி இருந்தமையால் தரியு இராஜா அவனை தம் இராஜ்யம் முழுமைக்கும் அதிகாரியாக நியமித்தான். இதனால் பிரதானுகளும் தேசாதிபதிகளும் பொறாமையினால் தானியேலை குற்றப்படுத்தும்படி முகாந்தரம் தேடினார்கள். தானியேல் உண்மையுள்ளவனாய் இருந்தபடியினால் அவர்களால் ஒரு குற்றத்தையும் கண்டுப்பிடிக்ககூடாதிருந்தது. தானியேலை அவனுடைய தேவனுடைய காரியத்திலே மாத்திரமே குற்றப்படுத்தமுடியும் என கண்டு, அவர்கள் தரியு இராஜாவினிடத்திலே கூட்டம்கூடி ராஜாவை நோக்கி; ராஜாவே எவனாகிலும் முப்பது நாள்வரையில் இராஜாவாகிய உம்மைத்தவிர எந்த தேவனையானாலும், மனுஷனையானாலும் நோக்கி யாதொரு காரியத்தைக் குறித்து விண்ணப்பம் பண்ணினால் அவர்களை சிங்கங்களின் கெபியில் போடவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள், ராஜாவும் அதற்கு கையெழுத்திட்டார். தானியேலோ இந்த காரியத்தை அறிந்தபோதிலும் தன் வீட்டுக்குள்ளே போய், தன் மேல் அறையிலே எருசலேமுக்கு நேராகா பலகணிகள் திறந்திருக்க அங்கே தான் முன் செய்துவந்தபடியே “முழங்காற்படியிட்டு” ஜெபம் பண்ணி ஸ்தோத்திரம் செலுத்தினான்(தானியேல் 6:10). இதைக்கண்ட பிரதானிகளும், தேசாதிபதிகளும் ராஜாவினிடத்திலே போய் சொன்னபோழுது, தரியு தனது கட்டளையின்படி தானியேலை தூக்கி சிங்கங்களின் கெபியில் போடும்படி கட்டளையிட்டார். கர்த்தர் தானியலோடுகூட இருந்தபடியினால் சிங்கங்களின் வாயை கட்டிப்போட்டிருந்தார், அவைகள் ஒன்றும் அவனை சேதப்படுத்தவில்லை.
இந்த காரியத்தின் நிமித்தம் தரியு ராஜா ஒரு நிருபத்தை எழுதி தன் ராஜ்யத்தின் ஆளுகைக்குள் எங்குமுள்ளவர்கள் யாவரும் தானியேலின் தேவனுக்கு முன்பாக நடுங்கிப் பயப்படவேண்டும். தானியேலின் தேவனே ஜீவனுள்ள தேவன், அவர் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறவர், அவருடைய ராஜ்யம் அழியாதது, அவருடைய கர்தத்துவம் முடிவு பரியந்தமும் நிற்குமென்று எழுதினான்(தானியேல் 6:26,27).

தேவனுடைய விசேஷித்த ஆவி உனக்குள் இருக்குமானால் எந்த சூழ் நிலையும் உன்னைப் பாதிக்காது. நீ தேவனுக்கு முன்பாக முழங்கால் படியிடும்போது உன் சூழ் நிலைகள் மாற்றப்படும். நீ முழங்காற்படியிட்டு ஜெபித்தல் தேசத்திலே மாற்றங்களும், எழுப்புதலும் வரும். கர்த்தர் இன்னும் அநேக தானியேலையும், எலியாக்களையும் எழுப்பிக்கொண்டிருக்கிறார். பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய அநேக பரிசுத்தவான்களையும் எழுப்பிக்கொண்டிருக்கிறார். நீ முழங்கால் படியிட்டால் சாத்தான் நடுங்குவான், உனக்கு சோதனைகளையும், பிரச்சனைகளையும் கொண்டுவருவான். அவனை மேற்கொள்ள முழங்காலை ஆயுதமாக பயன்படுத்துங்கள். இதோ எல்லாருடைய முழங்கால்களும் அவருக்கு முன்பாக முடங்கும் காலம் வந்திருக்கிறது, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் அவருக்கு முன்பாக முடங்கப்படும்(பிலிப்பியர் 2:10).

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து உயர்த்துவாராக.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்…

David .P
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *