எங்கு/எவ்வளவு காணிக்கை கொடுக்க வேண்டும்?

நாம் எங்கு/எவ்வளவு காணிக்கை கொடுக்க வேண்டும் என்பதை குறித்து 5 காரியங்களை தியானிப்போம்.

  1. மனதில் நியமித்தப்படியே கொடுங்கள்:

பழைய உடன்படிக்கை நாட்களில் இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் வருமானத்தில் 10% கொடுக்க வேண்டும். இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் உண்டான புதிய உடன்படிக்கை அதைவிட மேலானது. (If Law demands 10% then Love demands more) நாம் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதை மனதில் நிர்ணயம் பண்ண வேண்டும். வருமானம் பெருகும் போது கொடுக்கும் சதவீதமும் பெருகவேண்டும். மக்கதோனியா நாட்டு சபை கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள். தங்கள் திராணிக்குத் தக்கதாகவும், தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க, தாங்களே மனதுள்ளவர்களாயிருந்தார்கள். நாம் கொடுப்பதில் பெருக வேண்டும் என்பது இறைவனின் விருப்பம் – 2 கொரிந்தியர் 8:7.

  1. கண்ட இடத்தில் கொடுக்காமல் தேவன் தெரிந்துகொண்ட ஸ்தலத்தில் கொடுக்கவேண்டும்:

கண்ட இடமெல்லாம் நீ உன் சர்வாங்க தகனபலிகளை இடாதபடிக்கு எச்சரிக்கையாயிரு. – உபாகமம் 12:13

உங்கள் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஓர் இடம் உண்டாயிருக்கும்; அங்கே நீங்கள் நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் உங்கள் சர்வாங்க தகனங்களையும், உங்கள் பலிகளையும், உங்கள் தசமபாகங்களையும், உங்கள் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், நீங்கள் கர்த்தருக்கு நேர்ந்துகொள்ளும் விசேஷித்த எல்லாப் பொருத்தனைகளையும் கொண்டுவந்து.. – உபாகமம் 12:11

  1. சபையில் விதைக்க வேண்டும்:

தேவன் நம்மை நாட்டின சபையில் விதைக்க வேண்டும் என்று வேதம் நமக்கு ஆலோசனை சொல்கிறது. (மல்கியா 3:10)

  1. உண்மையான ஊழியத்தில் விதைக்கவேண்டும்:

கர்த்தருடைய பணியை உத்தமமாய் செய்கிற ஊழியர்களை நம்முடைய காணிக்கையினால் தாங்க வேண்டும்.

அதே நேரத்தில் தவறான உபதேசம்/ஊழியத்தில் காணிக்கை செலுத்தினால் அது நமக்கு பாவமாகும்: அவர்கள் செய்கிற தவறில் நாமும் பங்காளியாகிறோம் (2 யோவான் 10:11)

  1. எளிய ஜனங்களுக்கு உதவ வேண்டும்: தரித்திரர்களை நினைத்துக்கொள்ளுங்கள். (கலாத்தியர் 2:10) எளிய ஜனங்களுக்கு உதவ வேண்டும் என்று வேதம் நமக்கு ஆலோசனை சொல்கிறது (உபாகமம் 26:13). இப்படிப்பட்ட பலிகளில் தேவன் பிரியமாயிருக்கிறார். (எபிரேயர் 13:16)

தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக !

Thivakar.B
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *