நீதி 28 : 7 வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள புத்திரன்; போஜனப்பிரியருக்குத் தோழனாயிருக்கிறவனோ தன் தகப்பனை அவமானப்படுத்துகிறான்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/vh2b7HC8KJI
சாப்பிடுவது தவறல்ல, ஆனால் எப்பொழுதும் சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்றோ அல்லது அனைத்து வகையான உணவுகளையும் சாப்பிட வேண்டும் என்ற ஆசையோடு இருப்பது தான் தவறு. யோவானின் சீஷர்கள் இயேசுவிடம் வந்து, ‘உம்முடைய சீஷர்கள் ஏன் உபவாசிக்காமல் இருக்கிறார்கள்?’ என்று கேட்டார்கள். அப்பொழுது இயேசு, ‘மணவாளனாகிய நான் கடந்து சென்றபிறகு அவர்கள் உபவாசிப்பார்கள்’ என்று சொல்லுவார். அப்படியென்றால், சீஷர்கள் தாங்கள் விரும்பிய உணவைத் தவிர்த்து உபவாசம் செய்தார்கள் என்பது நமக்குத் தெரிகிறது. தானியேலும் அவனுடைய மூன்று நண்பர்களும் சைவம் சாப்பிட்டார்கள் என்பதற்காக, அசைவம் சாப்பிடக்கூடாது என்று அர்த்தமல்ல. தேவன் தான் இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சாப்பிடக் காடையைக் கொடுத்தார் (யாத் 16:13). அவர்கள் போஜனப்பிரியர்களாக இருந்ததன் விளைவு என்ன? வனாந்தரத்திலே இச்சையுள்ளவர்களாகி, வனாந்தரவெளியிலே தேவனைப் பரீட்சை பார்த்தார்கள். அப்பொழுது அவர்கள் கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார், ஆனால் அவர்கள் ஆத்துமாக்களிலோ இளைப்பை அனுப்பினார் (சங் 106:14, 15). அவர்களின் ஆத்துமா பலவீனமடைந்து போனது. ஏசா போஜனப்பிரியனாக இல்லாவிட்டாலும், பசியினிமித்தம் ஒரு சாதாரணக் கூழுக்காகச் சேஷ்டபுத்திர பாகத்தை இழந்துவிட்டான்.
மாத்திரமல்ல, போஜனப்பிரியர்களின் தோழனாகவும் நாம் காணப்படக்கூடாது என்று மேற்குறிப்பிட்ட வசனம் கூறுகிறது. கொலைகாரர்களின் கூட்டாளியாக இருப்பதைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தால், நாம் அதை எளிதில் புரிந்துகொண்டிருப்போம். கொலைகாரர்கள், திருடர்கள் அல்லது பொய்யர்களின் கூட்டாளியாக இருக்க நம்மில் யாருக்கும் விருப்பமில்லை; இவை மிகவும் மோசமான விஷயங்கள் என்று நாம் கருதுகிறோம். ஆனால், அளவுக்கு அதிகமாக உண்பவர்களின் கூட்டாளிகளாகவும் நாம் காணப்படக்கூடாது. எப்பொழுதும் உண்பது, குடிப்பது பற்றியே சிந்திப்பவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? அவர்களுக்குக் கொலை செய்வதிலோ அல்லது திருடுவதிலோ விருப்பமில்லை; அவர்களுக்குத் தேவையெல்லாம் உண்பதும் குடிப்பதும்தான். உண்பதிலும் குடிப்பதிலும் மட்டுமே ஆர்வம் கொண்டவர்களிடம் கவனமாக இருங்கள். அவர்கள் தங்கள் தந்தையை அவமானப்படுத்துகிறார்கள் என்று வசனம் கூறுகிறது. கிறிஸ்தவர்களிலும்கூட இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள். திருச்சபையில் ‘சிக்கன் பிரியாணி’ வழங்கப்படுகிறது என்று அறிவித்தால், எத்தனை பேர் வருவார்கள் என்று நினைக்கிறீர்கள்? அதே சமயம், ஒரு ஜெபக் கூட்டம் நடைபெறுகிறது என்று அறிவித்தால், எத்தனை பேர் வருவார்கள்? விசுவாசியாதவர்கள் மட்டுமல்ல, கிறிஸ்தவர்களிலும்கூட பெருந்தீனிக்காரர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் கண்டுகொள்ளலாம். ஜெபக் கூட்டத்தை ஏற்பாடு செய்வதை விட, உணவு பரிமாறப்படும்போது ஏன் அதிக மக்கள் வருகிறார்கள்? நாம் நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பெருந்தீனிப் பழக்கத்திலிருந்து விடுபடுவது நல்லது. நாம் மற்றவர்களை நியாயம் தீர்க்க விரும்பவில்லை, ஆனால் எப்போதும் நம்மை நாமே ஆராய்ந்து பார்த்துக்கொள்வதே நம்முடைய ஆவிக்குரிய வாழ்விற்கு நல்லது.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

