யாக் 3 : 4 கப்பல்களையும் பாருங்கள், அவைகள் மகா பெரியவைகளாயிருந்தாலும், கடுங்காற்றுகளால் அடிபட்டாலும், அவைகளை நடத்துகிறவன் போகும்படி யோசிக்கும் இடம் எதுவோ அவ்விடத்திற்கு நேராக மிகவும் சிறிதான சுக்கானாலே திருப்பப்படும்.
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/wGWr70_eAzQ
நடுக்கடலில் போகும் கப்பல் பெருங்காற்றுகளால் அடிபடுவதுண்டு. காற்று எந்த திசையில் வீசுகிறதோ, அந்த திசையில் கப்பல் கடந்துசென்றால், தான் போகவேண்டும் என்றிருக்கும் இடத்திற்கு செல்லாமல், தவறான இடத்திற்கு போய்விடும். ஆகையால் எவ்வளவு பெரிய காற்று அடித்தாலும், அதை கட்டுப்படுத்தி தான் விரும்பும் திசையில் கப்பலை இயக்க, அதை இயக்கும் Ship Master சிறிய சுக்கானை பயன்படுத்துவார். நம்முடைய வாழ்க்கை என்னும் பயணத்திலும் கூட கடுங்காற்று வீசக்கூடும். பலதரப்பட்ட மனிதர்கள் மூலமாக வரும் நெருக்கங்கள் காற்றை போல நம்மை மோதியடிக்கின்றன. அப்படிப்பட்ட சூழ்நிலையில் மனிதர்கள் தாங்கள் விரும்பும் வகையில் நம்மை இயக்க அனுமதிக்காமல், சிறிதான சுக்கானை நாம் தேவ சித்தத்துடன் பயன்படுத்த வேண்டும்.
மிகப்பெரிய விமானத்தை பாருங்கள். தன்னுடைய கரத்திலிருக்கும் சிறிய Steering மூலம் மிகப்பெரிய விமானத்தை தன் இஷ்டப்படி Captain திரும்புவார். அதுபோலத்தான் நம்முடைய சரீரத்தில் நாவு மிகச்சிறிய அவயவமாக இருந்தாலும், இதைக்கொண்டு முழு சரீரத்தையும் கட்டுப்படுத்த முடியும் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும். கண்ணானது சரீரத்திற்கு விளக்காய் இருப்பதுபோல, நாவானது நீங்கள் போகும் இடத்திற்கு சரியாய் போய் சேர பயன்படும் அவயவம் என்பதை அறிந்துகொள்ளுங்கள். கேட்பதற்கு துரிதமாகவும், பேசுவதற்கு பொறுமையாகவும், கோபிப்பதற்கு தாமதமாகவும் இருங்கள். எதைப் பற்றியும் பேச துடிக்கும் சோதனையிலிருந்து தப்பித்துக்கொள்ள உங்கள் சுக்கானை சரியாக பயன்படுத்த அதை ஆவியானவருக்கு விட்டுக்கொடுங்கள்.
நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது. சர்ப்பத்தின் வாயில் தான் விஷம் இருக்கிறது என்று சொல்லுவார்கள். ஆனால் மனிதனின் நாவிலும் விஷம் இருக்கிறது என்பதை வேதம் நமக்கு காட்டுகிறது. நம்முடைய நாவு விஷம் நிறைந்ததாக இருக்காமல், பரிசுத்த அக்கினியினால் நம்முடைய நாவை ஆவியானவர் தொடும்படி ஜெபியுங்கள். என் வாய் மீறாதபடிக்குத் தீர்மானம் பண்ணினேன் என்று சங். 17:3 ல் சங்கீதக்காரன் தீர்மானம் செய்தபடி, நீங்களும் தீர்மானம் எடுங்கள். உங்கள் நாவு உங்களை மீறாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

