தேவ சித்தத்தை அசட்டை செய்யவேண்டாம்:-

1 யோவா 2:17. உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.

G Christian Weiss என்ற தேவமனிதர் தன்னுடைய “The perfect will of God” என்ற புத்தகத்தில் தான் வேதாகமத்தை கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக தன் மாணவர்களுக்கு இப்படியாக சொன்னதை விவரித்திருந்தார்.

அவர் என்னுடைய வாழ்வில் ஆண்டவர் எனக்கு கொடுத்த இரண்டாவது சிறந்த திட்டம், சித்தத்தை நிறைவேற்றுவதிலேயே என் வாழ்க்கையின் பெரும்பகுதியை களித்தேன் என்பதாக சொன்னார். ஆண்டவர் அவருக்கு கொடுத்த முதல் திட்டம், சித்தம் என்னவென்றால், அவர் ஆப்பிரிக்கா நாட்டிற்கு ஒரு மிஷினரியாக செல்லவேண்டும் என்று அவருடைய இளமை பருவத்தில் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அவரோ அந்த சத்தத்திற்கு செவி சாய்க்காமல் கர்த்தர் கொடுத்த முதல் அழைப்பை நிராகரித்து, அந்த அழைப்பிலிருந்து விலகி வாழ ஆரம்பித்தார். பின்பு அவர் சுயநலவாதியாக ஒரு வங்கியில் வேலை செய்து, அதிக பணம் சேர்ப்பதையே தன்னுடைய முதல் குறிக்கோளாக செயல்பட்டு வந்தார். ஆண்டவர் தொடர்ந்து பல வருடங்கள் பேசியும் அவற்றை நிராகரித்துவிட்டார். ஒரு நாள் தன்னுடைய சிறு பிள்ளை ஒரு நாற்காலியிலிருந்து கீழே விழுந்து மரித்துப்போய்விட்டது. இந்த சம்பவம் அவர் தன்னுடைய முழங்காலை முடக்கி, இராமுழுதும் கண்ணீரோடு கர்த்தரிடம் திரும்ப செய்தது. இப்பொழுது இருக்கிற காலகட்டம் அவர் ஆப்பிரிக்கா செல்வது காலதாமதமாகிவிட்டது. கதவு அடைக்கப்பட்டாயிற்று. அவருக்கு தெரியும் இதுதான் கர்த்தர் கொடுத்த முதல் அழைப்பு / சிறந்த அழைப்பு, ஆனால் அதை தவறவிட்டார் என்பதாக. இப்பொழுது அவர் கேட்டார் ஆண்டவரே என்னுடைய மீதமுள்ள காலத்தில் நான் என்ன செய்ய சித்தமாய் இருக்கிறீர். நீர் என்னை நடத்தும் என்று ஒப்புக்கொடுத்தார். பின்பு கர்த்தரின் நடத்துதலினால் அவர் ஒரு வேதாகம ஆசிரியராக வாழ் நாள் முழுதும் பணியாற்றினார். ஆகையால் அவர் அவ்வப்போது சொல்வதுண்டு, என்னுடைய முதல் சிறந்த அழைப்பை இழந்து, இரண்டாவது சிறந்த அழைப்பையே செய்ய முடிந்தது என்பதாக.

சவுல் கர்த்தருடைய அழைப்பை அவன் கீழ்ப்படியாததினால் அழைப்பை இழந்துபோனான். யோனா கர்த்தர் அவனை நினிவேக்கு போகும்படியாக அழைத்தபோது, அதை கேளாமல் தர்சீஷுக்கு கடந்து சென்றான். ஆண்டவர் அவனை திருத்தி கொண்டுவரவேண்டிய சூழ்நிலைக்கு அவன் தள்ளப்பட்டான். ஆனால் நாம் பவுலைப்போல தேவ சித்தத்தை செய்ய அர்ப்பணித்து கடைசியில் பவுல் சொன்னதை போல நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன் (2 தீமோ 4:7) என்று சொல்லக்கூடியவர்களாக தேவ சித்தத்தை நிறைவேற்ற வேண்டும்.

கர்த்தருடைய கிருபை உங்களோடுகூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *