வார்த்தைகள் சுருக்கமாய் இருக்கட்டும் :-

பிர 5:2. தேவசமுகத்தில் நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு; தேவன் வானத்திலிருக்கிறார்; நீ பூமியிலிருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக.

ஜெபத்தில் நாம் அதிகமாக கேட்பதை விட செவிகொடுக்க வேண்டும். கர்த்தர் உங்களோடு கூட பேசுகிற வார்த்தையை அதிகமாக கேட்க வேண்டும். தொலைபேசியில் இரண்டு பாகங்கள் ஒன்று கேட்பதற்கென்றும், மற்றொன்று பேசுவதெற்கென்றும் இருக்கும். அநேக வேளைகளில் நாம் பேசும் கருவியாகவே இருக்கிறோம். உலகத்தில் அநேக பெருமை உள்ளவர்கள் தான் அதிகமாக பேசவேண்டும், தான் பேசுவதை தான் மற்றவர்கள் கேட்கவேண்டும் என்று விரும்புவார்கள். நம்முடைய ஜெபங்களும் அநேக வேளைகளில் இப்படியாக தான் ஆண்டவர் பேச வேண்டும் என்று விரும்பினாலும், அதை காட்டிலும் நாம் பேசுவதையே ஆண்டவர் கேட்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

ஒரு ஊழியக்காரர் சொன்னார் நாம் ஜெபத்தில் 90% செவிகொடுக்கிறவர்களாகவும், 10% பேசுகிறவர்களாகும் இருக்கவேண்டும். நாம் வேண்டிக்கொள்வதற்கு முன்பே பிதாவானவர் இன்னது வேண்டும் என்று அறிந்திருக்கிறார். இருந்தாலும் நமக்கு வேண்டியதை அவரிடம் கேட்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார். ஆனால் அது சுருக்கமாகவும், அலப்பல் இல்லாமல் இருக்கவேண்டும். சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்று இயேசு சொன்னார். எப்பொழுதும் அவருடைய வார்த்தையை ஜெபத்தில் செவிசாய்க்கிறவர்களாக இருக்க வேண்டும். காவல் துறை அதிகாரிகளிடம் நடந்துகொண்டே பேசும் கருவி (Walkie Talkie) காணப்படும். அவர்கள் தங்கள் தலைமையகத்திலிருந்து ஏதாவது செய்தி வருவதை கேட்டுக்கொண்டே இருப்பார்கள். அதுபோல தான் நாமும் நம்முடைய தலைமையகமான பரலோகத்திலிருந்து வரும் செய்தியை எப்பொழுதும் கேட்டு செவி சாய்கிறவர்களாக காணப்பட வேண்டும்.

பொதுவாக நீங்கள் தூரத்திலிருக்கும் ஒரு நபரிடம் பேசும்போது, தொண்டை வலிக்காமல் இருக்கும்படியாக முடிந்தளவு மறுபக்கம் இருக்கும் நபர் பேசுவதையே விரும்புவீர்கள். அதுபோல தான் தேவன் வானத்திலிருக்கிறார்; நீ பூமியிலிருக்கிறாய் என்ற வசனம் சொல்லுகிறது. ஆகையால் உங்கள் ஜெபத்தில் கர்த்தர் அதிகமாக உங்களோடு பேசும்படி இடம்கொடுங்கள். அவருடைய சத்தத்திற்கு செவி சாய்கிறவர்களாக இருங்கள். என் ஆடு என் சத்தத்தை அறியும் என்று ஆண்டவர் சொல்லுகிறதின் படி அவருடைய சத்தத்தை அறிகிறவர்களாக காணப்படுங்கள்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *