ஆப 3:19. ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார். இது நெகிநோத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்.
For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/3nRf9jzEhdg
ஒரு விசுவாசி இப்படியாக சொன்னார். நான் என்னுடைய கடந்த காலத்தில் யுத்தத்தில் இருந்தேன். யுத்தத்தில் இருந்தபோது அநேக காயங்கள் ஏற்பட்டது. குறிப்பாக என்னடைய காலில் குண்டு துளைத்துப்போனது. அந்த காயம் ஆறவும், நான் திரும்பவும் நன்றாக நடக்கவும் பல மாதங்கள் ஆனது. ஆனால் இப்பொழுது நான் ஆண்டவருடைய அன்பிற்குள்ளாக வந்துவிட்டேன். ஆண்டவர் என் நிலைமைகளை அறிந்து, படிப்படியாக என் சூழ்நிலைகளை சரிசெய்து, நேர்வழியில் என்னை நடத்தி, இப்பொழுதோ நல்ல வேலையை கொடுத்து உயர்த்தியிருக்கிறார் என்று. தாவீது, யோசேப்பு, தானியேல் போன்றோர்களுடைய வாழ்க்கையையும் பார்க்கும்போது கர்த்தர் எவ்வளவாய் அவர்களை உயர்த்தினார் என்பதை வேதத்தின் வாயிலாக நாம் அறிந்துகொள்ளலாம். அவர்களை உயர்த்திய தேவன் உங்களையும் உயர்த்துவார்.
நம்முடைய கால்களை மான்கால்களை போல மாற்றுபவர் நம் கர்த்தர். எவ்வளவு உயரமான பாறைகளாக இருந்தாலும், மான்களுடைய கால்கள் வழுவாமல் ஸ்திரமாக இருக்கும். அதுபோலத்தான் வாழ்க்கை என்னும் பாதையில் ஓடும் உங்கள் கால்களை கர்த்தர் ஸ்திரப்படுத்துவார். நீங்கள் வழுவிப்போகாதபடிக்கு உங்கள் கால்களை ஸ்திரப்படுத்துகிற கர்த்தர் உங்களோடு கூட இருக்கிறார். வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவர் (யூதா 24) என்று வசனம் சொல்லுகிறது.
சங்கீதக்காரன் சொல்லுகிறான் என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும் (சங் 61:2) என்று. அதுபோல உங்கள் இருதயம் பலவிதமான சோதனைகளால் கடினப்படும்போது கர்த்தரை நோக்கி கூப்பிடுங்கள்; அவர் உங்களை உயரமான கன்மலையின்மேல் கொண்டு போய் விடுவார். உயரமான கேதுருமரங்களையும், உச்சிதமான தேவதாரு விருட்சங்களையும் கொடுத்து கர்த்தர் உங்களை உயர்த்துவார். அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார் (சங் 113:7). ஏழ்மைகள், தரித்திரங்கள், எல்லாவற்றையும் கர்த்தர் மாற்றி, தீமையான காரியங்களை நன்மையாக மாறும்படி செய்வார். பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தினார் (சங் 40:2) என்ற வசனத்தின்படி உங்கள் கால்களை கன்மலையின் மேல் நிறுத்தி, உறுதிப்படுத்துவார்.
கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

