சுத்தமும் அசுத்தமும் (Pure and Defiled )

தீத்து 1:15 சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாயிருக்கும்.

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/tZhtv-FabAk

வீட்டிலோ , தெருவிலோ யாரும் அசுத்தத்தில் இருக்கவேண்டுமென்றோ , நடக்கவேண்டுமென்றோ விருப்படமாட்டார்கள். துன்மார்க்கமுள்ள அசுத்தமுள்ள மனம் யாரிடமும் எந்த நன்மையையும் காண்பதில்லை. ஒவ்வொரு சகோதர, சகோதிரியையும் எப்போதும் சற்றே சந்தேகத்துடன் பார்க்கும் மனப்பான்மையுடன் இருந்தால், அவரிடம் ஏதோ தவறு இருக்கிறது. உங்கள் பார்வையில், உங்களைத் தவிர வேறு யாரும் நேர்மையானவர்கள் இல்லை என்ற அந்த அகந்தைதான் மக்களிடமிருந்து தேவனுடைய கிருபையைப் பறித்துக்கொள்கிறது, அதனால் அவர்கள் தங்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் கிருபையைப் பெறுவதில்லை. அவர்கள் பாவத்தில் தோற்கடிக்கப்படுகிறார்கள். நீங்கள் மட்டுமே நேர்மையானவர் என்றும், மற்ற அனைவரும் நேர்மையற்றவர்கள் என்றும் நினைக்கிறீர்கள். இந்த நபரைச் சந்தேகிப்பது, அந்த நபரைச் சந்தேகிப்பது, இதுவே ஒரு தீய மனிதனின் அடையாளம் அது அசுத்தமுள்ள மனம் என்பதை தேவ ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

சகோதர சகோதரிகளே, இந்தத் தீமை நம்முடைய மாம்சத்தில் குடியிருக்கிறது. ஒருவர் ஒரு நல்ல நோக்கத்துடன் எதையாவது செய்கிறார் என்று நம்மால் ஒருபோதும் நினைக்க முடிவதில்லை. ஆகவே, அந்தப் பழக்கத்தை விட்டுவிடக் கற்றுக்கொள்வோம். நாம் ஏன் இன்னொருவரை நியாயந்தீர்க்க வேண்டும்? சர்வவல்லமையுள்ள தேவன் தாமே ஒரு மனிதனை அவனது வாழ்வின் முடிவில் மட்டுமே நியாயந்தீர்க்கத் தீர்மானித்திருக்கிறார். ஒரு மனிதன் தன் வாழ்நாளை முடிக்கும் வரை, குறைந்தபட்சம் அவன் 70 வயதில் மனந்திரும்பக்கூடும் என்ற நம்பிக்கையில், தேவன் பொறுமையுடன் காத்திருந்து அவனை நியாயந்தீர்க்க முடியுமானால், நம்மால் ஏன் முடியாது? அந்த மனிதனின் பாவ வாழ்க்கையின் 70 ஆண்டுகளையும் தேவன் துடைத்தெறிய சித்தமாயிருக்கிறார். ஆனால் நாமோ மிகவும் பொறுமையற்ற ஜீவன்களாக இருக்கிறோம். ஒரு மனிதன் தன் வாழ்நாளை முடிக்கும் வரை நம்மால் காத்திருக்க முடியாது. நாம் அவனை இப்போதே நியாயந்தீர்க்க துடிக்கிறோம் . நாம் அப்படி இருந்தால், நாம் எவ்வளவு தேவபக்தியற்றவர்கள் என்பது தெரிகிறது. நம்முடைய மாம்சத்தில் குடியிருக்கும் இந்த தேவபக்தியற்ற தன்மையிலிருந்து நம்மை நாமே சுத்திகரித்துக்கொண்டு, தேவபக்தியுள்ளவர்களாக மாற முடியும் என்பதற்காக தேவனைப் போற்றுவோம். எப்பொழுதும் சுத்த மனசாட்சியுடன் காணப்படுவோம்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *