கைகளை விரித்துச் செய்யும் சகல விண்ணப்பம்:-

I இராஜாக்கள் 8 : 37. தேசத்திலே பஞ்சம் உண்டாகிறபோதும், கொள்ளைநோய் உண்டாகிறபோதும், வறட்சி, சாவி, வெட்டுக்கிளி, பச்சைக்கிளி உண்டாகிறபோதும், அவர்கள் சத்துருக்கள் தேசத்திலுள்ள பட்டணங்களை முற்றிக்கைபோடுகிறபோதும், யாதொரு வாதையாகிலும் யாதொரு வியாதியாகிலும் வருகிறபோதும், 38. உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் அனைவரிலும் எந்த மனுஷனானாலும் தன் இருதயத்தின் வாதையை உணர்ந்து, இந்த ஆலயத்துக்கு நேராகத் தன் கைகளை விரித்துச் செய்யும் சகல விண்ணப்பத்தையும், சகல வேண்டுதலையும், 39. உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு மன்னித்து, 40. தேவரீர் எங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குப் பயப்படும்படிக்கு தேவரீர் ஒருவரே எல்லா மனுபுத்திரரின் இருதயத்தையும் அறிந்தவராதலால், நீர் அவனவன் இருதயத்தை அறிந்திருக்கிறபடியே, அவனவனுடைய வழிகளுக்குத்தக்கதாகச் செய்து, அவனவனுக்குப் பலன் அளிப்பீராக.

இந்த அதிகாரத்தில் ஆவியானவர் மூன்று முறை (22 , 38 , 54 வசனங்கள்) மீண்டும் மீண்டுமாக கைகளை விரித்து விண்ணப்பம் ஏறெடுப்பதை குறித்து எழுதிவைத்திருப்பதை வாசிக்கிற வேளைகளில் தெரிந்துகொள்ளலாம்.

குறிப்பாக 37ம் வசனத்திலிருந்து, 40 வரை வாசிக்கும்போது, இப்பொழுது இந்த உலகத்தில் சம்பவிக்கிற காரியங்கள் நடந்துகொண்டிருப்பதை பார்க்க முடியும்.  முதலாவதாக தேசத்தில் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. போதிய தற்காப்பு பொருட்கள் இல்லை, ஊரடங்கினாள் தேசம் பல இன்னல்களை சந்திக்கிறது, பொருளாதாரம் சீர்குலைந்துருகிறது. இரண்டாவதாக கொள்ளைநோய் முழு உலகத்தையும் ஸ்தம்பிக்கும்படியாக செய்திருக்கிறது. அடுத்ததாக தொடர்ந்து வறட்சி, சாவி, வெட்டுக்கிளி, பச்சைக்கிளி, வாதை , வியாதிகள் என்று முழு உலகமும் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், 38ம் வசனத்தின்படி, கர்த்தருடைய ஜனங்களாகிய நாம் நம்முடைய கரங்களை ஆலயத்திற்கு நேராக அதாவது கர்த்தருக்கு நேராக விரித்து விண்ணப்பங்களையும், வேண்டுதல்களையும் ஏறெடுக்க வேண்டுமென்று கர்த்தர் விருப்பமுடையவராய் இருக்கிறார். அப்படி செய்வோமென்றால், அவர் நம் பாவங்களை மன்னித்து, பலன் அளிப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆவியானவர் இங்கே மூன்று முறை அழுத்தமாக கைகளை விரித்து விண்ணப்பத்தை ஏறெடுக்கவேண்டுமென்று எழுதிவைத்திருப்பாரென்றால், அதன் முக்கியத்துவத்தை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

சாலொமோன் இப்படியாக ஜெபித்து முடித்தபிறகு கர்த்தர் சொல்கிறார், கர்த்தர் அவனை நோக்கி: நீ என் சமுகத்தில் செய்த உன் விண்ணப்பத்தையும் உன் வேண்டுதலையும் கேட்டேன் ( 1 ராஜா 9 : 3 ) என்று.

கைகளை விரித்து விண்ணப்பம் ஏறெடுப்பதென்பது ஒரு பலி. அப்படிப்பட்ட விண்ணப்பத்திற்கு ஒரு விசேஷித்த வல்லமை உண்டு. இதை வாசித்துக்கொண்டிருக்கிற நீங்கள், உங்களை கர்த்தருடைய வார்த்தைக்கு ஒப்பு கொடுத்து, கைகளை விரித்து தேசத்தில் நடக்கும் காரியங்களுக்காக ஜெபம் செய்யுங்கள். அப்படி செய்வீர்களென்றால் கர்த்தர் பாவத்தை மன்னித்து, பலன் அளிப்பவராய் இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.   அவர்அசாதாரமான காரியங்களை நிச்சயமாக செய்வார்.

இன்றிலிருந்து இப்படிப்பட்ட விண்ணப்பத்தை ஏறெடுக்க தீர்மானித்துக்கொள்ளுங்கள். அவர் உங்கள் விண்ணப்பத்தை கேட்டு பதில் செய்வார்.

கர்த்தர் தாமே உங்களோடுகூட இருப்பராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *