மனிதனின் மகிமை ( The Glory of Man )

நீதி 19 : 11 மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.

For audio podcast of this Manna Today, please click the link,https://youtu.be/pNiEzvmnbr4

கோபத்தை மேற்கொள்வதற்கு தேவன் நமக்குக் கிருபை அளிக்கிறார். சாதாரணமாக நமக்கு மிக விரைவாக வரும் கோபத்தை, பரிசுத்த ஆவியின் வல்லமையினாலும் தேவனுடைய கிருபையினாலும் நம்மால் மேற்கொள்ள முடியும். கோபப்படுவதில் விவேகமாக இருப்பது என்றால், நாம் நீதியுடன் கோபப்பட வேண்டிய ஒரு நேரம் இருக்கிறது, ஆனால் நாம் நம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். எபேசியர் 4:26 கூறுகிறது, “கோபப்படுங்கள், ஆனால் பாவம் செய்யாதீர்கள்.” ஒரு தந்தை தன் பிள்ளையிடம் இப்படியாகச் சொன்னார், “நான் உன்னை அடிக்க விரும்புகிறேன், ஆனால் நான் இன்னும் கோபமாக இருப்பதால் என்னால் அதை இப்போது செய்ய முடியாது. என் கோபம் தனிந்த பிறகு, நான் உன்னைத் தண்டிப்பேன்.” அதுதான் ஞானம். கோபத்தில் ஒரு பிள்ளையைத் தண்டிப்பது, அந்தத் தந்தையே ஒரு முட்டாள் என்பதை நிரூபிக்கிறது. கோபத்தில் விவேகமாக இருந்து, அதே சமயம் சரியானதைச் செய்வதே ஞானம். நாம் கோபப்படாத வாழ்க்கை வாழமுடியுமா என்று கேட்டால் அது நிச்சயம் முடியாது. அதேவேளையில் சிலர், “எனக்குக் கோபம் பயங்கரமாக வரும், அதை என்னால் கட்டுப்படுத்த முடியாது” என்று சொல்லுவார்கள். அதைச் சொல்லிக்கொள்வதில் அவர்களுக்குப் பெருமை வரும். ஆனால் பிள்ளைகளுடைய காரியங்களிலும், வேலை ஸ்தலங்களிலும், மனைவி கணவரிடமும் கோபப்படுவதில் விவேகம் காணப்பட வேண்டும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

அந்த வசனம் மேலும் கூறுகிறது, “குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.” இது ஒரு மகத்தான வசனம். ஒரு மனிதனின் மகிமை என்பது, மற்றொருவர் தனக்கு எதிராகச் செய்யும் பாவத்தைப் புறக்கணிப்பதே ஆகும். யாராவது உங்களை அவமதித்தால், அந்த அவமதிப்பைப் புறக்கணித்து அவரை நேசிப்பதே உங்கள் மகிமை என்பதை அறிந்துகொள்ளுங்கள். நம்மால் அதைச் செய்ய முடியாவிட்டால், நாம் வாழ்வில் தேவனுடைய மகிமையின் ஒரு பகுதியை இழந்துவிடுகிறோம் என்ற நினைவு நமக்கு இருக்க வேண்டும். புறக்கணிப்பதே அல்லது மன்னிப்பதே உங்கள் மகிமை; வெறுமனே, “சரி, நான் உன்னை மன்னிக்கிறேன்” என்று சொல்லி, அதை உங்கள் மனதில் வைத்துக்கொண்டு தொடர்ந்து வஞ்சமாக நினைவில் கொள்வது அல்ல. மாறாக அதைப் புறக்கணித்து, “அது பரவாயில்லை” என்று சொல்வதே உங்கள் மகிமை. அதுதான் நீங்கள் உண்மையாகவே ஞானத்தைப் பெற்றுருக்கிறீர்கள் என்பதைக் காட்டுகிறது. ஒரு மீறுதலைப் மன்னிப்பதே ஞானமுள்ள மனிதனின் மகிமை. அன்பு மற்றவர்களின் எண்ணற்ற தவறுகளையும் பாவங்களையும் மூடுகிறது. இயேசு விபச்சார ஸ்திரீயை மன்னித்தார். சபித்த பேதுருவையும் மன்னித்தார். காட்டிக்கொடுத்த யூதாஸ் ஸ்காரியோத்தை “சிநேகிதனே” என்று அழைத்தார். உங்களை காயப்படுத்தியவர்களை, அசட்டை செய்தவர்களை, எதிர்த்தவர்களை, “சரி பரவாயில்லை” என்று மன்னித்து அவர்களிடம் அன்பு கூற பழகுங்கள். அதுவே உங்கள் மகிமை.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *