தேவனே, பூமியில் உம்முடைய வழியும், எல்லா ஜாதிகளுக்குள்ளும் உம்முடைய இரட்சணியமும் விளங்கும்படியாய்,
தேவரீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்(சங்கீதம் 67:1,2)
தேவன் நமக்கு இரங்குகிறவர், அவர் தமது முகத்தை உங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணி ஆசீர்வதிக்கிறவர். அவர் தமது கிருபையினாலே எல்லாரையும் இரட்சிக்கிறவர். தேவனுக்கு பயந்தவர்கள் மேல் தமது மகிமையை உதிக்கச்செய்கிறவர். என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும். அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும். நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்(மல்கியா 4:2).
கர்த்தர் தமது முகத்தை உங்கள்மேல் பிரகாசிக்கபண்ணும்பொழுது, முதலாவது உன்னுடைய இருண்டுப்போன வாழ்க்கை மாறும், உன் கட்டுகள் உடைக்கப்படும், வியாதிகள் சொஸ்தமடையும், உன் குடும்பங்கள் ஆசீர்வதிக்கப்படும், உன் வியாபாரங்கள் ஆசீர்வதிக்கப்படும், தரித்திரங்கள் நீங்கி ஆசீர்வாதமான மழைப்பொழியும், உன் ஆவிக்குறிய வாழ்க்கையும் ஆசீர்வதிக்கப்படும். தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை. அவருடைய ஒளி ஜனங்கள் மேல் உதித்தப்போழுது, இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள், மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது(மத் 4:15) அப்பொழுது ஜனங்கள்மேல் இருந்த இருளின் அதிகாரம் நீங்கியது, கட்டுகள் உடைக்கப்பட்டது, சகல ஜனங்களின் வியாதிகளும் நோய்களும் நீங்கி சொஸ்தமாக்கப்பட்டார்கள்.
இரண்டாவது கர்த்தர் தமது முகத்தை உங்கள்மேல் பிரகாசிக்கபண்ணினால், நீ கர்த்தருக்காய் எழும்பி பிரகாசிக்கிற பாத்திரமாய் மாறுவாய். எழும்பிப் பிரகாசி, உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது(ஏசா60:1) கர்த்தர் உன்மேல் உதிக்கும் போது அவருடைய மகிமை உன்மேல் காணப்படும். அந்த மகிமை அநேகரை கர்த்தருக்கு நேராய் திருப்பும். கர்த்தருடைய மகிமை யோவான் ஸ்நானகனை நிரப்பியிருந்தபோழுது அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காய் மாறினான்(யோவான்5:23) அநேகரை அவன் கர்த்தருக்கு நேராய் திருப்பினான்.
மூன்றாவது கர்த்தர் தமது முகத்தை உங்கள்மேல் பிரகாசிக்கபண்ணினால், உன் ஆவிக்குறிய வாழ்க்கையில் தோல்விகள் வருவதேயில்லை. எந்த சத்துருவும் உன்னை தோற்கடிக்க முடியாது, ஏனெனில் சத்துருக்களுக்கு முன்பாக கர்த்தர் உன் தலையை உயர்த்தி வைதிருக்கிறார். சத்துருவை நீ தோற்கடிப்பாய், அவைகளை மிதித்து போடுவதற்கு கர்த்தர் உனக்கு பெலனை கொடுத்திருக்கிறார். எந்த இருளின் அதிகாரமும் உன்னை சேதப்படுத்துவதுமில்லை. சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப் போடுவாய். ஒன்றும் உன்னை சேதப்படுத்தாது. கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருக்கிறார்(ஏசா 60:20)
கர்த்தரை நோக்கிப் பார்தவர்களின் முகங்கள் பிரகாசமடைந்தன, மோசேயின் மேல் கர்த்தருடைய மகிமை உதித்தப்போழுது அவனுடைய முகம் பிரகாசமடைந்தது. அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள், அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை(சங் 34:5) என்கிற வசனத்தின்படி அவரை நோக்கி பார்க்கின்ற எல்லோருடைய முகங்களும் பிரகாசமடையும். எல்லாரும் அவருடைய மகிமைக்குள்ளாய் கடந்து வாருங்கள், அப்பொழுது அவருடைய இரட்சிப்பை காண்பீர்கள்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதித்து உயர்த்துவாராக.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்…
David .P
Word of God Church
Doha – Qatar
www.wogim.org