காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தார்:-

கலா 4:4-5. நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக, காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்.

ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு என்று பிரசங்கி சொல்லுகிறான். பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு. ஆண்டவர் எல்லாவற்றிற்கும் குறித்த காலத்தை வைத்திருக்கிறார். சிலர் நினைப்பார்கள் ஆண்டவர் தனக்கு கொடுத்த வாக்குத்தத்தை நிறைவேற்ற கால தாமதம் செய்கிறாரே என்று நினைக்கக்கூடும். அவர் கால தாமதம் செய்யவில்லை; மாறாக எல்லாவற்றிக்கும் ஒரு காலத்தை வைத்திருக்கிறார். இயேசுவும் கூட குறிப்பிட்ட காலம் நிறைவேறும் வரை அவர் இந்த உலகத்தில் ஸ்திரியின் வயிற்றில் பிறக்கவில்லை. அவர் நினைத்தால் ஸ்திரியின் வித்து சர்ப்பத்தின் தலையை நசுக்கும் என்ற வார்த்தை பேசப்பட்ட அந்நேரத்தில் தானே ஆதாமின் நாட்களிலேயே ஸ்திரியின் வித்தாக பிறந்திருக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் காலத்தின்படி செய்கிறவர், காலம் நிறைவேறினபோது நாமெல்லாரும் புத்திராசுவிகாரம் அடையும்படியாகவும், நியாயப்பிரமணத்திலிருந்து நம்மை மீட்டுக்கொள்ளும்படியாகவும், ஸ்திரியின் வயிற்றில் இயேசு பிறந்தார்.

உங்கள் வாழ்க்கையில் கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தங்களும் அப்படியே நிச்சயமாக நிறைவேறும். காலம் நிறைவேறுகிற அந்த நாள் வரைக்கும் காத்திருங்கள். கர்த்தர் ஒரு சில வாக்குத்தத்தை நிறைவேற்ற உங்களை காத்திருக்கும்படி செய்கிறார் என்றால், நிச்சயம் அவருடைய மேலான திட்டம் உங்கள் வாழ்க்கையில் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளுங்கள். ஆபிரகாம் ஈசாக்கை காத்திருந்து காலம் நிறைவேறினபோது பெற்றெடுத்தான். அன்னாள் சாமுவேலை பெற்றெடுப்பதற்கு முன்பாக காத்திருந்து காலம் நிறைவேறினபின்பு அவனை பெற்றெடுத்தாள். யோசேப்பின் தரிசனங்கள் நிறைவேற சுமார் பதிமூன்று வருடங்கள் யேசேப்பு காத்திருந்து காலம் நிறைவேறினபோது அவன் எகிப்து தேசத்திற்கே அதிபதியாக உயர்த்தப்பட்டான். தாவீது உடனடியாக சமஸ்த இஸ்ரவேலுக்கு இராஜாவாக மாறிவிடவில்லை. காலம் நிறைவேறின பிறகு அவன் சமஸ்த இஸ்ரவேலுக்கும் இராஜாவாக அவனை கர்த்தர் உயர்த்தினார்.

காலம் நிறைவேறினபோது இயேசு குறித்த நேரத்தில் இந்த உலகத்தில் பிறந்தார். அதுபோல குறித்த நேரத்தில் காலம் நிறைவேறும் போது உங்களுக்கு கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தங்கள் நிச்சயமாக நிறைவேறும்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *