கெத்செமனேயிலிருந்து கொல்கொதா வரை (From Gethsemane to Golgotha):-

மாற்15:22-24. கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவரைக் கொண்டுபோய், வெள்ளைப்போளம் கலந்த திராட்சரசத்தை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பொழுது அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். அதன்பின்பு, அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டு, ஒவ்வொருவன் ஒவ்வொரு பங்கை எடுத்துக்கொள்ளும்படி அவைகளைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/N-4AjJdEx_A

இயேசு கெத்செமனேவிலிருந்து கொல்கொதா வரைக்கும் கடந்து சென்ற சிலுவை பாதையை நாம் அறிந்திருப்பது ஒரு தேவ பெலன். கெத்செமனேவில் இயேசு வியாகுலப்பட்டு ஜெபித்தார். சுமார் 600 போர்சேவர்கர்களும், 400 மதத்தலைவர்களும் அவரை கைது செய்ய கெத்செமனே தோட்டத்திற்கு வந்தார்கள் என்று வரலாறு கூறுகிறது. இரவில் இயேசு தீர்க்கதரிசி என்று குற்றம்சாட்டப்பட்டு அன்னாவிற்கு முன்பாக நிறுத்தப்பட்டார், மேசியா என்று குற்றம்சாட்டப்பட்டு காய்பாவுக்கு முன்பாக நிறுத்தப்பட்டார். அவர் அடிக்கப்பட்டார், சிறைச்சாலையில் வைக்கப்பட்டார். பொந்தியுபிலாத்து மற்றும் ஏரோதுக்கு முன்பாக நிறுத்தப்பட்டார். 39 முறை வாரினால் அடிக்கப்பட்டார். இயேசுவின் தலையில் முட்கிரீடம் சூட்டப்பட்டது. ஒரு முள்ளின் நீளம் 1.5” நீளம், இப்படியாக 90 முட்கள் இயேசுவின் தலையை தைத்தது. ஒரு முள் ஒரு தேள் கொட்டும் வலிக்கு சமம்; அப்படியென்றால் 90 தேள்கள் கொட்டும் அளவிற்கான வேதனை அவருக்கு இருந்தது. ரோம போர்சேவகர்களின் காலணிகள் இரும்பு தகட்டினால் செய்யப்பட்டது. அப்படிப்பட்ட காலணியால் மிதிக்கும்போது அவ்வளவு வேதனை வரும். கோலினாலும் தடியினாலும் அடித்தார்கள்.

சிலுவை 15 அடி நீளமும், 8 அடி அகலமும், 150kg எடையும் உள்ளது. சுமார் 18 மணி நேரம் இயேசு ஒன்றும் சாப்பிடவில்லை ஒன்றும் அருந்தவில்லை. அதிகமான காய்ச்சல் அவருக்கு இருந்திருக்கும். சிலுவையை சுமந்து செல்லும்போது சுமார் 110 முறை கீழே விழுந்தார். 1.5km சிலுவையை தூக்கிக்கொண்டு நடந்தார். சீமோன் என்பவன் சிலுவையை 20 மீட்டர் தொலைவிற்கு சுமந்தான். அதையும் இயேசு விரைவில் சென்று வாங்கி மீண்டும் தன் சிலுவையை சுமந்து சென்றார். அவருடைய வஸ்திரத்தை கழட்டியபோது அது சரீரத்தை பிய்த்துக்கொண்டு வந்தது. 8” நீளம், 3/4” அகலம் கொண்ட ஆணியினால் அடிக்கப்பட்டார். இரண்டு கள்ளர்களுக்கும் நடுவில் சிலுவையில் இயேசுவை தொங்க விட்டார்கள். கடற்காளானை குடித்து வலியை போக்கி கொள்ள மறுத்துவிட்டார். விலாவில் ஈட்டியால் குத்தினார்கள். சுமார் 6.5 லிட்டர் இரத்தம் வெளியே வந்தது. வெள்ளை சீலையால் இயேசுவை கட்டினார்கள்.

இவ்வளவு பாடுகளையும் இயேசு உங்களுக்காக ஏற்றுக்கொண்டார். கெத்செமனே என்று சொன்னால் எண்ணெய் செக்கு என்று அர்த்தம். கொல்கொதா என்றால் மண்டை ஓடு என்று அர்த்தம். செக்கில் எண்ணெய் பிழியப்படுவது போல இயேசு பிழியப்பட்டார். அவர் மரணத்தை உங்களுக்காக ருசிபார்த்தார்.

கர்த்தருடைய கிருபை உங்களோடு கூட இருப்பதாக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *