பட்டாடையைப் போல மெல்லிய ஆடை (Fine Linen like Silk)

1 நாளா 15 : 27 தாவீதும், பெட்டியைச் சுமக்கிற சகல லேவியரும், பாடகரும், பாடகரின் வேலையை விசாரிக்கிற தலைவனாகிய கெனானியாவும், மெல்லிய புடவையான சால்வைகளைத் தரித்திருந்தார்கள்; தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்திருந்தான்.

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/XdOQELhOLes

வேதாகமத்தில் சில ஆடைகளை குறித்து எழுதப்பட்டிருக்கிறது. சணல் நூல் தரித்த ஆடை, பஞ்சு நூலாடை, மெல்லிய ஆடை அதாவது பட்டாடையைப் போல உயர்தரம் வாய்ந்ததும், தூய்மையாகவும் இருக்கும் ஆடை. பட்டுப்புடவையோ, பட்டு வேஷ்டியோ பொதுவாக பண்டிகை நாளிலும், திருமணம் போன்ற வைபவ நாளிலும் சந்தோஷத்தை வெளிப்படுத்தவும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் உடுத்துவார்கள். தாவீது கர்த்தருடைய உடன்படிக்கை பெட்டியை கொண்டுவரும்போது அவனுக்கும், பெட்டியை சுமக்கிற லேவியருக்கும், பாடகருக்கும் மிகுந்த மகிழ்ச்சி உண்டானது. அந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வண்ணமாக அவர்கள் மெல்லிய ஆடையை தரித்திருந்தார்கள். இன்றைக்கு நாம் நம்முடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த துதி என்னும் ஆடையை தரிக்கிறவர்களாக காணப்பட வேண்டும். துதியின் ஆடை அணிந்து துயரமெல்லாம் மறந்து துதித்து மகிழ்ந்திருப்போம் என்று அழகாக தந்தை அவர்கள் பாடியிருப்பார்கள்.

ஆசாப், ஏமான், எதுத்தூனுடைய கூட்டத்தாரும், அவர்களுடைய குமாரர் சகோதரருடைய கூட்டத்தாருமாகிய பாடகரான லேவியர் அனைவரும் மெல்லிய புடவைகளைத் தரித்து, கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் பிடித்துப் பலிபீடத்திற்குக் கிழக்கே நின்றார்கள் என்று 2 நாளாகமம் 5:12 கூறுகிறது. மோசேயின் நாட்களிலும் இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து புறப்பட்டபின், கர்த்தர் ஓரேபிலே அவர்களோடு உடன்படிக்கை பண்ணினபோது, மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வண்ணமாக அவர்கள் மெல்லிய ஆடையை தரித்திருந்தார்கள்.

மாத்திரமல்ல, ஆட்டுக்குட்டியானவரின் மணநாளிலே, மணவாட்டி சபையாகிய நமக்கும் கொடுக்கப்போகும் ஆடை மெல்லிய ஆடை என்று வசனம் கூறுகிறது. வெளி 19:8 கூறுகிறது, சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே. எதிர்காலத்தில் நமக்கு வழங்கப்படும் மெல்லிய ஆடைக்கான அர்த்தம் நீதி என்பதாய் காணப்படுகிறது. மணவாளன் கொடுக்க இருக்கும் மெல்லிய ஆடையை பெற்றுக் கொள்ள ஆயத்தமாக இருங்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *