கர்த்தர்உன்னைமிகவும்பெரியவனாக்குவார் (LORD God will exalt you exceedingly).

தாவீதின் குமாரனாகிய சாலொமோன் தன் ராஜ்யத்திலே பலப்பட்டான், அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனுடனே இருந்து அவனை மிகவும் பெரியவனாக்கினார் (2 நாளா. 1:1).

For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/8Im1mK-pp48

ஒரு மனுஷனை ஆசீர்வதித்து பெரியவனாக உயர்த்துவது கர்த்தர். அவரைப் பின்பற்றுகிறவர்கள் வாழ்ந்திருக்க வேண்டும் என்று விரும்புகிற தேவன் அவர். ஈசாக்கு ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான் என்று ஆதி. 26:13 கூறுகிறது. யோசபாத் வரவர மிகவும் பெரியவனான் என்று 2 நாளா. 17:12 கூறுகிறது. மொர்தெகாய் என்பவன் மேன்மேலும் பெரியவனானான் என்று எஸ்தர் 4:2 கூறுகிறது. இவர்களைப் போல கர்த்தருடைய காருண்யம் உங்களையும் ஆசீர்வதித்து பெரியவனாக்கும்.

சாலொமோன் பெரியவனாய் விளங்கினதின் காரியம், அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனுடன் இருந்தார். சவுலின் குடும்பத்துக்கும் தாவீதின் குடும்பத்துக்கும் நெடுநாள் யுத்தம் நடந்தது, தாவீது வரவரப் பலத்தான், சவுலின் குடும்பத்தாரோ வரவரப் பலவீனப்பட்டுப் போனார்கள். தாவீது பலத்து, விருத்தியடைந்ததின் காரணம், சேனைகளின் தேவனாகிய கர்த்தர் அவனோடேகூட இருந்தார்  என்று 2 சாமு. 5:10 கூறுகிறது. கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான் என்று ஆதி. 39:2 கூறுகிறது. கர்த்தருடைய பிள்ளைகளே, கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து பெரியவனாக்குவதற்கு, அவர் உங்களோடிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவர் உங்களோடிருப்பதற்கு நீங்கள் அவருக்கு கீழ்ப்டிந்த ஜீவியம் செய்ய வேண்டும். கர்த்தாவே சொல்லும், அடியேன் கேட்கிறேன் என்ற சாமுவேலோடு கர்த்தர் இருந்தார், அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்துபோக விடவில்லை, சாமுவேல் கர்த்தருடைய தீர்க்கதரிசிதான் என்று தாண் முதல் பெயெர்செபா மட்டுமுள்ள சகல இஸ்ரவேலருக்கும் விளங்கினது என்று வேதம் கூறுகிறது. கர்த்தருடைய வார்த்தைகளுக்கும், அவருடைய சத்தத்திற்கும் கீழ்ப்படியுங்கள், அப்போது கர்த்தர் உங்களோடிருப்பார். ராஜாவின் போஜனத்தாலும், பானத்தினாலும் தங்களைத் தீட்டுப்படுத்தாதபடிக்கு தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்ற எபிரேய வாலிபர்கள் தீர்மானித்தார்கள். ஆகையால் கர்த்தர் அவர்களோடிருந்து எரிகிற அக்கினி சூளைக்கும், சிங்கத்தின் வாய்க்கும் அவர்களைத் தப்புவித்து பாதுகாத்துக் கொண்டார். அவர்களைப் போல நீங்களும் பரிசுத்தமுள்ள ஜீவியம் செய்யும் போது கர்த்தர் உங்களோடிருப்பார். கர்த்தரை நீங்கள் உண்மையாய் தேடும் போது, கர்த்தர் உங்களோடிருப்பார். அவரை விசுவாசித்து, அவரோடு நடக்கும் போதும் கர்த்தர் உங்களோடிருப்பார். அதுபோல, கர்த்தருக்கு பிரியமில்லாத பாவ வாழ்வு வாழ்ந்தால் சிம்சோனைப் போல கர்த்தர் உங்களை விட்டு விலகிவிடுவார். ஆகையால் கர்த்தர் உங்களோடிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், அப்போது நீங்கள் வாழ்ந்து, உயர்ந்து, பெரியவர்களாயிருப்பீர்கள்.

கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Pastor. David
Word of God Church
Mobile  +974-55264318
Doha – Qatar
www.wogim.org
https://youtube.com/uthamiyae

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *