நீதி 30 : 4 வானத்துக்கு ஏறியிறங்கினவர் யார்? காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? தண்ணீர்களை வஸ்திரத்திலே கட்டினவர் யார்? பூமியின் எல்லைகளையெல்லாம் ஸ்தாபித்தவர் யார்? அவருடைய நாமம் என்ன? அவர் குமாரனுடைய நாமம் என்ன? அதை அறிவாயோ?
For audio podcast of this Manna Today, please click the link, https://youtu.be/BXj2OYH07t0
நீதிமொழிகள் புஸ்தகத்தில் ஆகூர் ஒரே ஒரு அதிகாரத்தை எழுதினான். இந்த ஆகூர் தன்னைக்குறித்து அவன் கூறியபோது சொல்லுகிறான், மனுஷரெல்லாரிலும் நான் மூடன்; மனுஷருக்கேற்ற புத்தி எனக்கு இல்லை. நான் ஞானத்தைக் கற்கவும் இல்லை, பரிசுத்தரின் அறிவை அறிந்துகொள்ளவும் இல்லை (நீதி 30:1,2) என்பதாக. அதாவது ஆகூருடைய அறிவுத்திறன் சராசரிக்கும் மிகக் குறைவு, சொல்லப்போனால் மிகவும் குறைவு. பள்ளி நாட்களில், இவர் வகுப்பில் கடைசி இரண்டு அல்லது மூன்று மாணவர்களில் ஒருவராக இருந்திருப்பார். ஒரு பாடமும் ஒழுங்காகக் கற்காத மாணவனைப் போல ஆகூர் இருந்தான். பரிசுத்த வேதாகமத்தை எழுதுவதற்கு, தேவன் இத்தகைய நபர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்றால் உங்களையும் என்னையும் ஆண்டவர் எடுத்துப் பயன்படுத்துவது எத்தனை உண்மை என்று அறிந்துகொள்ளுங்கள்.
ஒருவர் மிகுந்த அறிவுள்ளவராக இருந்தாலும், அவர் இந்த நிலைக்கு வரும் வரை தேவனுடைய வார்த்தையைப் புரிந்துகொள்ள முடியாது. 1 கொரிந்தியர் 3:18-ல், பவுல் இவ்வாறு கூறுகிறார்: “ஒருவனும் தன்னைத்தானே வஞ்சியாதிருப்பானாக; இவ்வுலகத்திலே உங்களிலொருவன் தன்னை ஞானியென்று எண்ணினால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகக்கடவன்.” எப்பொழுது நீங்கள் உங்களையே ஞானியென்று எண்ணிக்கொள்ளாத இடத்திற்கு வருகிறீர்களோ, அங்கிருந்து ஆண்டவர் உங்களுக்குத் தரும் வெளிப்பாடு பெரிதாய் இருக்கும்.
இப்படித் தன்னைத்தானே பெருமையடித்துக்கொள்ளாத ஆகூர் மிகப்பெரிய தீர்க்கதரிசனத்தை இந்த நீதிமொழிகள் புஸ்தகத்தில் எழுதுகிறான். ஆகூர் இந்த அதிகாரத்தை எழுதியபோது, பரலோகத்திலிருந்து யாரும் பூமிக்கு இறங்கி வந்திருக்கவில்லை. ஆகூர் பக்தன் இயேசு பரலோகத்திலிருந்து இறங்கிவருவதைக்குறித்தும் ஏறிச்செல்வதைக்குறித்தும் தீர்க்கமாகக் கூறினான். மேலும் ஆகூர், “அவருடைய நாமம் என்ன? அவர் குமாரனுடைய நாமம் என்ன?” என்று கேட்கிறார். தன்னை மற்ற மனிதர்களை விட அறிவற்றவன், மூடன் என்று கூறிக்கொண்ட ஒரு மனிதருக்கு இத்தனை பெரிய வெளிப்பாடு கிடைத்ததைப் பாருங்கள். தேவன் எப்படிப்பட்டவர் என்று சிந்தித்துப் பாருங்கள்: அவர் தாழ்மையுள்ளவர்களுக்குக் கிருபை அளிக்கிறார். தங்களைத் தாழ்த்துகிறவர்கள் உயர்த்தப்படுகிறார்கள். நீங்களும் ஆகூரைப் போல உங்களைத் தாழ்த்துவீர்களென்றால், நீங்களும் இயேசுவைக் குறித்த வெளிப்பாடுகளை அதிகமாய் அறிந்துகொள்ளுவீர்கள். இயேசுவை அறிகிற அறிவில் வளர்வதற்கு வேண்டிய தாழ்மை நமக்குள்ளாக இருக்கட்டும்.
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்.
Robert Jegadheesh. R
Word of God Church
Doha – Qatar
www.wogim.org

